Thirukkural 13 தினம் ஒரு திருக்குறள்
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
![தினம் ஒரு திருக்குறள் கற்போம்... Thirukkural 13 # Tamil Best Thirukkural 6 Explain 1 Thirukkural 13 தினம் ஒரு திருக்குறள்](https://www.kidhours.com/wp-content/uploads/2022/09/thinam-oru-kural-kidhours-3.jpg)
மழை காலத்தால் பெய்யாது, பொய்க்குமானால், கடலால் சூழப்பட்டுள்ள இப்பரந்த உலகினுள் பசி நிலைபெற்று உயிர்களை வாட்டும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)
மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்
—மு. வரதராசன்
உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்
—சாலமன் பாப்பையா
கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்
—மு. கருணாநிதி
kidhours – Thirukkural 13
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.