- Advertisement -
திருச்சியில் ஆழ்துளை கிணற்றில் சிக்கி இருக்கும் சிறுவன் சுஜித்தை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் தற்போது புதிய ரிக் மிஷின் கொண்டுவரப்பட்டு பணிகள் நடந்து வருகின்றது.
சிறுவன் குழிக்குள் விழுந்து 48 மணி நேரம் முடிந்த நிலையில் புதிய ரிக் மெஷின் மூலம் 5 மணி நேரத்திற்குள் குழி தோண்டும் பணியினை முடித்து சிறுவனை வெளியே கொண்டு வந்துவிடலாம் என்று கூறப்பட்டுள்ளது.
முதலில் 26 அடியில் காணப்பட்ட சிறுவனை கயிறு வைத்து மீட்கும் பணி தோல்வியில் முடிந்ததால் பின்பு பல வழிகளில் முயற்சிகள் செய்யப்பட்டு வந்தது.
ஆரம்பத்தில் சிறுவனின் பேசியது, அழுது கொண்டிருந்த சத்தம் கேட்டது. 70 அடிக்கு சென்ற பின்பு எந்தவித சத்தமும் கேட்கப்படவில்லை. இன்று காலை 100 அடிக்கு சென்றுவிட்ட சிறுவன் மயக்கநிலையில் இருக்கலாம் என்று கூறப்பட்டு வருகின்றது.
தற்போது வரை 35 அடிக்கு சுரங்கம் தோண்டப்பட்டநிலையில், ஆழ்துளைக்கிணறுக்கு அருகில் 2மீற்றர் தொலைவில் இந்த குழி தோண்டப்படுகிறது. ஒரு ஆள் இறங்கும் அளவுக்கு 1மீற்றர் அகலத்தில் குழி தோண்டப்படுகிறது. குழியில் இறங்க 7 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். இன்னும் 5 மணி நேரத்தில் குழி தோண்டப்பட்டு விடும் என்று கூறப்படும் நிலையில் மருத்துவர்களும் தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.
- Advertisement -