Saturday, January 18, 2025
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புரயில் பெட்டியில் இருக்கும் மஞ்சள் நிற சாய்வு கோடுகள் எதற்காக? - The Surprising Meaning...

ரயில் பெட்டியில் இருக்கும் மஞ்சள் நிற சாய்வு கோடுகள் எதற்காக? – The Surprising Meaning Behind the White and Yellow Stripes on Train Coaches

- Advertisement -
TrainStripes-kidhours
TrainStripes-kidhours

ரயில் பெட்டியில் இருக்கும் மஞ்சள் நிற சாய்வு கோடுகள் எதற்காக? இந்தியாவில் உள்ள அதிகளவு மக்கள் பெரும்பாலும் பேருந்துகளுக்கு அடுத்தப்படியாக ரயில் பயணங்களை தான் தேர்வு செய்கின்றனர்.

- Advertisement -

குறிப்பாக இப்போதெல்லாம் ரயில் பயன்பாடு அதிகரித்துவிட்டது என்று தான் கூறவேண்டும். இந்தியாவில் 1853-ம் ஆண்டு தான் ரயில்வே சேவை துவங்கப்பட்டது, பின்பு இந்த ரயில் சேவை 1951-ம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்டது.

 

- Advertisement -

அன்று முதல் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. அப்படி ஒருநாள் வந்த இந்த மாற்றம் தான் மஞ்சள் நிற கோடுகள். பொதுவாக ரயிலில் பயணித்திருப்பவர்களுக்குக் கூட ரயிலில் உள்ள சின்ன சின்ன விஷயங்கள், அல்லது குறியீடுகளுக்காக அர்த்தம் தெரியாமல் இருக்கும்.

- Advertisement -

அப்படியான ஒருவிஷயம்தான் ரயில் பெட்டிகளில் கடைசியில் ஜன்னலுக்கு மேல் உள்ள மஞ்சள் நிற கோடுகள், இந்த கோடுகள் எதைக் குறிக்கிறது என்பது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை எனக் கூறலாம்.

 

இந்தியாவில் விரைவுவண்டி சூப்பர் பாஸ்ட் ரயில்கள் எல்லாம் நீல நிறத்தில் ரயில் பெட்டிகளை கொண்டிருக்கும். பெரும்பாலான பெட்டிகள் முன்பதிவு பெட்டிகளாக இருக்கும். ஒரு சில பெட்டிகள் மட்டுமே முன்பதிவில்லா பெட்டிகளாக இருக்கும்.

இந்த நீலநிற பெட்டியில் உள்ள நான்கு முனைகளில் உள்ள கடைசி ஜன்னலுக்கு மேல் மஞ்சள் நிற சாய்வு கோடுகள் இருக்கும்.

இந்த கோடுகள் இருந்தால் அந்த பெட்டிகள் முன் பதிவு இல்லாத பெட்டிகள் என அர்த்தம், முன்பதிவு உள்ள பெட்டிகளில் இந்த கோடுகள் இருக்காது. எனவே ரயில்வே நிலையத்தில் பயணிகள் முன்பதிவில்லாத பெட்டியை எளிதாக கண்டுபிடிக்கவே இவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல் :-

நீலம் – தொடர்வண்டியின் நடுவே உள்ள முன்பதிவு செய்யாத பெட்டிகள்

மஞ்சள் – மாற்றுத்திறாளிகளுக்கு மற்றும் கடைசி பெட்டி

பச்சை – மகளிர் மட்டும்

சிவப்பு – முதல் வகுப்பு

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.