Friday, November 22, 2024
Homeபொழுது போக்குவிளையாட்டுக்கள்தைப்பொங்கல் விளையாட்டுக்கள்#thaipongkal_vilayattukkal_Katturai

தைப்பொங்கல் விளையாட்டுக்கள்#thaipongkal_vilayattukkal_Katturai

- Advertisement -

தமிழர்களுக்கென்று தனித்துவமான விளையாட்டுகள் இருந்தன என்பதே மெல்ல மெல்ல தமிழர்களுக்கே மறந்து வருகிறது. ஆங்கிலேயரின் ஆட்சி முறையினால் தமிழகத்திலும் தமிழர் சார்ந்த நிலங்களிலும் ஆங்கில விளையாட்டுகள் மேன்மை அடைந்து தமிழர் விளையாட்டுகள் வலுவிழந்து தள்ளப்பட்டன. அவை சல்லிக்கட்டு, பாரி வேட்டை, சிலம்பம், சடுகுடு, ஓட்டம், இளவட்டக்கல், வழுக்குமரம் ஏறுதல், வண்டி ஓட்டம், ஆடுபுலி ஆட்டம், மல், வில், பெண்களுக்கான தாயம், பல்லாங்குழி, தட்டாங்கல், நொண்டியாட்டம், கண்ணாமூச்சி, கிச்சு கிச்சு தாம்பலம், ஊஞ்சல் எனச் சொல்லலாம்.

- Advertisement -

நேற்று வரை கிராமப்புற தெருக்களில் இருந்த தட்டாங்கல், நொண்டி யாட்டம், கண்ணாமூச்சி என்பனவற்றை இன்று காணவில்லை. அதற்குக் காரணம் நகர்ப்புறக் காற்றில் கலந்துவிட்ட அந்நிய கலாசாரம் ஆகும். இத்தகைய சூழலில் மறந்துவிட்ட நம் விளையாட்டுக்களை மீண்டும் தமிழர் திருநாளான பொங்கல் விழாவில் காண முடிந்தது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பொங்கலையொட்டி கடந்த 2 நாட்களாக விளையாட்டு போட்டிகள் நடந்தன. கிராமங்களை கலகலக்க செய்த இந்த விளையாட்டு போட்டிகள் தமிழர் பெருமையை உணர்த்தும் வகையில் அமைந்திருந்தன.

pongkal_vilayattukkal
kids_study

குறிப்பாக விளையாட்டு போட்டிகளில் இடம்பெற்ற வடம் இழுத்தல், பாட்டிலில் நீர் நிரப்புதல், பலூன் உடைத்தல், வழுக்குமரம் ஏறுதல் உள்ளிட்ட போட்டிகளில் சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் பங்கேற் றனர். மியூசிக்கல் சேர் போட்டியில் குழந்தைகள் ஆர்வத்துடன் ஓடி சென்று இருக்கையை பிடிக்கும் காட்சி ஆனந்தமானது.

- Advertisement -

பலூன் உடைத்தல் போட்டியில் ஒருவரது பலூனை உடைக்க ஓடும் ஆர்வம் கலகலக்க செய்தது. சைக்கிள் டியூப்களில் காற்றை வெளியேற்றிவிட்டு மெதுவாக சைக்கிளை நகர்த்தும் போட்டியும் நடந்தது. மேலும் தேங்காயை வேகமாக பல்லால் உரிக்கும் போட்டியும் நடந்தது. இதில் இளைஞர்கள் தங்கள் பற்களின் வலிமையை காட்டியது ரசிக்க வைத்தது. இதேபோல கரும்பு கடித்தல் போட்டி, முறுக்கு கடித்தல் போட்டிகள், தண்ணீர் அருந்தும் போட்டிகளும் புதுமையாக இருந்தன.

- Advertisement -
pongkal_vilayattukkal
kids_study

தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளான கபடி, சிலம்பம் ஆகிய போட்டிகளும் பொங்கலையொட்டி நடைபெற்றது. சிலம்பப் போட்டியில் இன்றைய இளைஞர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவதை பொங்கல் விழாக்களில் காண முடிந்தது. இதேபோல சில பகுதிகளில் வயதான பெரியவர்களுக்கும் கபடி போட்டி நடத்தப்பட்டது. 60 வயதை கடந்த பெரியவர்கள் ஆர்வத்துடன் கபடி விளையாடினர். வடம் இழுத்தல் போட்டி 4 விதமாக நடைபெற்றது. இளைஞர்கள் மட்டும் பங்கேற்ற போட்டி, இளம் பெண்கள் மட்டும் பங்கேற்ற போட்டி, இளைஞர்கள் ஒருபுறமும்,பெண்கள் ஒருபுறமும் நின்று பங்கேற்ற போட்டி, சிறுவர்கள் மட்டும் பங்கேற்ற போட்டி என நடந்த போட்டிகளில் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றது பலரையும் வியக்க செய்தது.

பொங்கல்விழாவில் உரலை தூக்கி போட்டு பெண்கள் அசத்தினர். இளவட்டக்கல் தூக்கும் இளைஞர்களுக்கு சவாலாக களம் இறங்கிய இந்த பெண்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இளவட்டக்கல் 45 கிலோ, 50 கிலோ, 90 கிலோ ஆகிய 3 எடைகளில் இருந்தது. இளவட்டகல்லை பொறுத்தவரை நெஞ்சில் படாமல் தூக்க வேண்டும் என்ற விதி உண்டு.

pongkal_vilayattukkal
kids_study

மேலும் தூக்கியபின் சுமந்து நின்றபடி கீழே போடவேண்டும். அந்த வகையில் வடலிவிளை இளைஞர் தங்கராஜ் 90 கிலோ இளவட்டக்கல்லை 11 முறை தூக்கி போட்டு அசத்தினார். முத்துப்பாண்டி, வெள்ளப்பாண்டி ஆகியோர் 8 முறை இளவட்டக்கல்லை தூக்கினார்கள். இதேபோல் பற்களால் வேகமாக தேங்காய் உரித்த இளைஞர் தினேஷ் முதல் பரிசையும், முருகன் இரண்டாவது பரிசையும் பெற்றனர்.

ஆலங்குளம் அருகே உள்ள முத்துக்கிருஷ்ணப்பேரியில் நடந்த பொங்கல் விழாவில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் காமராஜ்நகர் சிவனணைந்தபெருமாள் 90 கிலோ இளவட்டக்கல்லை 16 முறை தூக்கி போட்டு மக்களை கவர்ந்தார். இவர் தொடர்ந்து 21 ஆண்டுகளாக இந்த இளவட்டக்கல்லை தூக்கி வருகிறார்.தொடர்ந்து சிறுவர்- சிறுமியர்களுக்கான மியூசிக்கல் சேர், சாக்கு போட்டிகள் நடைபெற்றது. தொடர்ந்து இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடை பெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, இளவட்டக் கல்லை தூக்கி 3 முறை மைதானத்தினை சுற்றி வந்து அசத்தினர். மேலும் இளைஞர்களுக்கான கபடி போட்டியும் நடைபெற்றது. இறுதியில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

pongkal_vilayattukkal
kids_study

பொதுவாக மாறி வரும் கம்ப்யூட்டர் யுகத்தில் இன்னமும் கிராமங்களில் மக்கள் பண்டைய தமிழர் களின் பாரம்பரிய வழக்கங் களை பொங்கல் விழாக் களில் நடத்தி வருவது தமிழரின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.