உடலுக்கு சக்தியை தரக்கூடிய புரதம் அதிக முள்ள உணவுகள் தான் தானியங்கள். நமது முன்னோர்களின் முக்கிய உணவே தானியங்களில் செய்த கூழும் கஞ்சியும் தான். இக்காலத்தில் அவை எல்லாம் நோயாளிகளுக்கு என்று ஒதுக்கிவைத்த விட்டு விரைவுணவுகளை நாடி செல்வது நாகரீகமாகதெரியலாம்.
ஆனால் அவை ஆரோக்கியத்தைதரப்போவதில்லை நோய் நாம்மை நெருங்காமல் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க தானியங்கள் உதவுகின்றன.தானிய உணவுகள் பொதுவாக ஒவ்வொரு நாளுக்கும் உகந்த கடவுளுக்கும் ஏற்பவகுக்கப்பட்டுள்ளது.புத்தி கூர்மைக்கு புதனன்று பாசி பயற்றை வகுத்தனர்.பயற்றில் கல்சியம்,பாஸ்பரஸ் இரும்பு போன்ற
சத்துக்களும் தயாமின் நியாசின் போன்றவைட்டமின்களும் அதிகமாககாணப்படும்.இவை பசியை தூண்டி இலகுவாக ஜீரணமடைய கூடியதாகவும் இரத்ததை தெளிவாக்கி கொதிப்பை குறிக்ககூடியதாகவும் தலைக்கும் கண்ணிற்கும் குளிச்சியை தரக்கூடியது.
அதாவது சூரியன் உச்சமாக இருக்க கூடிய நாளான ஞாயிறு அன்று உடலுக்கு வெப்பத்தைதரக் கூடிய கோதுமையை வகுத்துள்ளனர். கோதுமையில்புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், நியாசின் என பல சத்துக்கள் நிறைந்துள்ளன கோதுமை உலகில் முதலில் பயிரிடப்பட்ட தானியங்களில் ஒன்றாகும். இதன் தாயகம் மத்திய கிழக்கின் லிவண்டா பிரதேசம் மற்றும் எத்தியோப்பிய விலை நிலங்களாகும். உலகில்அதிக பரப்பளவில் பயிரிடபடுவதோடு மொத்த வணிகத்தில் இதன் பங்கு அதிகமாகும்.கோதுமை முதுகுவலி, மூட்டுவலி, வயிற்றில்புளிப்புதன்மை, வியர்க்குரு,காசநோய் போன்றவற்றால் அவதிபடுவோரையும் உடல் நலம்தேற செய்யும்.
சந்திரன் உச்சமாக இருக்க கூடிய நாளான திங்கள் அன்று நெல்லை வகுத்தனர். நெல்லில் நார், இரும்பு, துத்தநாகம் ,கல்சியம் புரதம் மக்னீசியம் சத்துகள் நிறைந்துள்ளன.
v நாவாராநெல்:-பேதிமற்றும்நீரிழிவுநோய்க்கும்குடல்புண்ணுக்கும்
v சிவப்புநெல்:-வாந்திமற்றும்பேதிக்கும்
v கஞ்சிநெல்:- மஞ்சள்காமாளைக்கும்
v வரிநெல்:- சின்னம்மைக்கும்பயன்படுகிறது.
செவ்வாய் சிவப்பு தானியமானது வரையை வகுத்தனர்.துவரையில் செம்பு சத்தும், இரும்பு சத்தும் அதிகளவில் காணப்படுகிறது. மேலும் காபோவைதரேட்டுக்கள் துத்தநகம் கல்சியம் போன்றவையும் காணப்படும். இவை இரத்த அழுத்தத்தை சீராகவைக்கவும், வளற்சிக்கும், உடல்எடையை குறைக்கவும், நோய்எதிர்ப்புஆற்றலைஅதிகரிக்கவும்பயன்படும்.
வலமானதேகத்துக்கு குருவுக்கு கொண்டைக் கடலையை வகுத்தனர்.கொண்டைக் கடலையில் நார்சத்து, வைட்டமீன்கள், கனிம சத்துக்கள்,அதிகளவிலும், குறைந்த கொழுப்புசத்தும் உள்ளது.உடல் எடை அதிகரிக்கும், நுரையீரல் நோய் குணமாகும், இருமல், சளி, தலைபாரம் தலை வலி குணமாகும் நரம்பைஉறுதியாக்கும்.
உறுப்புகளின் ஆரோக்கியத்துக்காக சுக்கிரன் ஆட்சி பெற்றிருக்கும் நாளில் மொச்சையை வகுத்தனர். இதில் புரதம்மாவுச்சத்து, கோலின், பாஸ்பரஸ் அதிகளவில் காணப்படுகிறது. இது சக்கரையின் அளவை கட்டுப்படுத்துவதுடன் மலச்சிக்கலை போக்கும்.பலபல சக்தினை கொண்ட எள்ளினை சனிக்கும் வகுத்தனர். இதி விட்டமின்,,நியாசின், தையாமின்,போலிக்கமிலம், போன்ற சத்துக்கள்பாரிய அளவில் காணப்படுகிறது. இவை எலும்பு தேய்மானம் ஏற்படாமல் தடுக்கிறது, எலும்பு அடர்த்தியை பராமரிக்கிறது,கொழுப்பின் அளவை குறைகிறது, இரத்த குழாய்களின் ஆரோக்கியம் பாராமறுக்கப்படுகிறது.
மன ஆரோக்கியத்துக்கு முக்கியமான சாயா கிரகங்களானராகுவுக்கு உளுந்தை வகுத்தனர்.கரையும் மற்றும் கரையாத நார்சத்துக்களை கொண்டுள்ளது. இதில் பொட்டாசியம், இரும்பு, மசினிசியும், போன்றவை அதிகளவில் காணப்படுகின்றன.இவைசருமஆரோக்கியத்திற்கும், எலும்பு ஆரோக்கியத்துக்கும்,கேசபராமரிப்புக்கும், ஆரோக்கியமான தசைகளை பெறவும் உதவும்.
மற்றையசாயாகிரகமானகேதுவுக்குகொள்ளுவையும்வகுத்தனர்.இதில்புரதம்மாவுச்சத்து, கலோரி ,கல்சியம், இரும்பு,பாஸ்பரஸ் அதிகளவில் காணப்படுகிறது. எலும்புக்கு நல்ல வளர்ச்சியை கொடுக்கும்,தசைகள் வலுப்பெறும் உடலில் உள்ள கொழுப்பை அகற்றி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.