Teacher’s Day Tamil Poem ஆசிரியர் தின கவிதைகள்
1.
கோபப்பட்டு திட்டினாலும் நாங்கள்
கோபித்து கொள்ள மாட்டோம்
எம் மனம் புண்படா வண்ணம்
நீவிர் உதிர்க்கும் புன்னகையால்
வகுப்பாசிரியராய் வந்து வகுப்பை
வகுப்பை அலங்கரித்து எங்கள்
மனதை எல்லாம் அபகரித்தீர்
புரியாத புதிராகவே இருந்துள்ளீர்
பல நேர்ங்களில்,
உங்கள் கடமையாற்றிட
எனினும் நாங்கள் புரிந்துதான்
வைத்துள்ளோம் எங்கள் காரியமாற்றிட
வர்ணிக்க இயலா அன்பு
வார்த்தையில் அடங்கா பொறுமை
குருபக்தியை கடந்த நட்பு
உணர்வோடு உறைந்த கடமை
புகைப்படமாய் கைதுசெய்ய முயன்றிருக்கிறேன்
முடிந்ததில்லை….
நிழற்படமாய் கைதுசெய்து மகிழ்கிறேன்
நினைவுகளை……..
2.
கல்லை சிலை ஆக்குவது சிற்பி
மண்ணை பானை ஆக்குவது குயவன்
கற்பனையை ஓவியம் ஆக்குவது ஓவியர்
ஒரு மாணவனை வெற்றியாளராக ஆக்கியது ஆசிரியரே
உன்னால் உருவாகிய மாணவர்கள் எத்தனை எத்தனையோ
மாணவர்கள் கல்வி கற்க நீ உன் கால்கடுக்க நின்றாய்
புத்தக கல்வியோடு சேர்த்து பொது அறிவையும் கற்பித்தாய்
மாணவர்களின் திறமையை ஊக்குவித்தாய்
வழிகாட்டியாகவும் இருந்தாய்
எத்தனை சாதனையாளர்களை உருவாக்கியுள்ளாய் என்பதற்கு கணக்கே இல்லை
உன் உழைப்பிற்க்கு இடு இவ்வுலகில் எதுவும் இல்லை
3.
நீங்கள் Mam ஆக இருப்பினும்
ஒரு நல்ல Mom ஆக இருக்கிறாய்
எழுத்தின் வித்தியாசத்தை
பொறுத்து அல்ல
எண்ணத்தின் வித்தியாசத்தை
பொறுத்தே
4.
ஆலமரத்தடியில் கற்பித்து
ஆகாயம் முழுக்க வியாபித்து
ஆற்றல் இழக்க உரைத்து
ஆயுள் கரைய உழைத்து
ஆறாம் அறிவை வளர்த்து
ஆசை ஆசையாய் அணைத்து – அந்த
ஆசானை கொஞ்சம் நினைத்து
ஆருயிர் உள்ளவரை மதித்து – ஓர்
ஆசை மனதில் உதித்து சொல்கிறேன்
ஆசிரியர் தின வாழ்த்து….
5.
நினைவலைகள்
நீட்சி பெறுகிறது
யான் பெற்ற
கல்வி கொடுத்த
எம் ஆசிரியப்
பெருமக்களை நினைத்துப்
பார்த்து!
கடமையைக்
கண்ணாய் கொண்டு
கண்டிப்பு
பிரம்மாயுதம் தொடுத்து
எழுத்தறிவித்து எண்ணறிவித்து
யாம் எண்ணிய திசையறிந்து
கருத்தாய் கை பிடித்து
களர்நில வாய்க்காலில்
வளர்நில அறிவு பாய்ச்சி
வாழ்வைச் செதுக்கி வைத்த
சிற்பிகள் அவர்கள்!
எம் சிந்தனைகளை
செம்மையாக்கி
வாழ்வியல் எதார்த்தங்களை
வாழ்வியல் நெறிகளூடே
தேட வைத்து
வளமைத் திசைகளை
வாழ்க்கைப் பாதையின்
வழிக்குக் கொண்டு வந்த
திறன் தோய்ந்த
தியாகச் செம்மல்கள் அவர்கள்!
ஆண்டுக்கொரு முறை
வந்து போகும்
ஆசிரியர் தின நாளில்
இணைய தள
வாழ்த்துச் செய்தியனுப்பி
வழிகாட்டிய நல்லோரை
வாழ்த்துவதில் மட்டும்
எம் இதயம்
நிறைந்து விடுகிறது.
எப்போதும்!
ஆனாலும்
அவர்கள் காட்டிய
வழியில் என்னை நெறிப்படுத்தி
நாளும் பயணித்து
சிகரம் தொட்டு
குரு பெயர் சொல்லும்
சீடனாய் வாழ்வது
குருதட்சணையாய்
மாறியது கண்டு
மனம் குளிர்வார்கள் அவர்கள்
எப்போதும்!
நான் உயரம் தொட
ஏணிப்படிகளாய்
என் வாழ்வில் பயணித்த
என் விடியலுக்கான
விளக்கொளியாய் மாறி நின்ற
எம் இதயம் நிறைந்த
அத்தனை ஆசான்களுக்கும்
நனி நன்றிகள்
பாத காணிக்கையாய்!
இவ்வுலக வாழ்வில்
பெரும்பயன் செய்து
வாழ்வைக் கடந்து சென்ற
ஆசான்களுக்கும்
எம் இதய அஞ்சலிகள்.
வாழ்க நின் புகழ்!
6.
ஆசான்..!
அறிவு கண் திறந்து..!
கனவு பாதை வகுத்து..!
கற்றாலும் கல்வியும்
மட்டும் கற்றுக் தராமல்..!
வாழ்க்கை கல்வி
கற்று கொடுத்து..!
வாழ்க்கை பாதை
அமைத்துக் தந்து..!
ஒவ்வொரு மாணவரின்
கனவிற்கும் இலட்சியத்திற்கும்..!
பின்னால் ஆசிரியர்
என்ற…
மாபெரும் துணை
உண்டு..!
மாபெரும் வெற்றி
உண்டு..!
7.
ஆசிரியர்களின் சிறப்பியல்கள் சொல்ல ஓரு ஜென்மம் போதாத போதிலும்
என் கவிதையின் மூலம் பல வரிகள் சொல்ல விரும்புகிறேன்
மாணவர்களுக்குள்ள திறமை
இன்னதென்பதை அறியும் சிற்பிகள்!
இரவில் நிலவை பார்த்தால் நிலவுக்கு செல்ல ஆசைப்படுகிறோம்
வலியில் துடிப்பவர்களை பார்த்தால்
மருத்துவர்களாக
ஆசைப்படுகிறோம்
நடுக்கடலில் மிதக்கும் கப்பலை பார்த்தால் மாலுமிகளாக ஆசைப்படுகிறோம்
உண்ணும் உணவை பார்த்தால்
உடல் வியர்க்க உழைக்கும்
விவசாயிகளாக ஆசைப்படுகிறோம்
விதையாக இருந்த நம்மை மரமாக்கி
மற்றவருக்கு நிழலாக மாற்றி !
முடிகிடந்த நம் மனதை
லட்சியம் எனும் சுடர்ஒளியை ஏற்றி !
நம் விதியை உடைத்து
நம்மை அறிஞராக, கவிஞராக, மருத்துவராக, காவலராக !
தன் தாய்நாட்டை பாதுகாக்கும்
ராணுவ வீரனாக !
நம்மை உருவாக்கும் நல்வழிகாட்டிகள் !
காலத்தின் மருவுருவம் நம் ஆசிரியர்கள் !
ஆசிரியர்களை மதித்து !
மனத்திரையில் பதித்து !
துயரத்தில் இருக்கும் போது தன்னம்பிக்கையின் வடிவமான
ஆசிரியர்களை நினைத்து !
ஆண்டுகள் பல கடந்தாலும் !
அழியா புகழை நம் அடைந்தாலும் !
ஆசிரியர்களின் நினைவு
நீங்கமற இடம் பிடிக்கும் என்றும்
நம் மனதில் !
8.
பிரசவ அறையில்
பிறப்புறப்பைக் கிழித்து
உலகம் தொட்டேன்!
அன்று தொடங்கியது பாடம்!
இன்று வரை பாடம் ஒன்று தான்!
வாழ்க்கை! படிப்பிப்பவரோ உருவத்தால்
மாறிக் கொண்டுதான் இருக்கிறார்கள்! தவழப் பழக்கி
சிரிக்கப் பழக்கி
நடக்கப் பழகி
வார்த்தை மெல்ல அசை போட வைத்து…
என் முதல் ஆசான்கள் ஒப்படைத்தார்கள்…
என் இரண்டாம் பெற்றோரிடம்!
வாழ்வில் வரும் முதல் ஏதும்
மறப்பதில்லை எளிதில்!
வயது சிறிதென்றாலும் இன்னும்
பசுமையாகத் தான் உள்ளது!
பள்ளி நினைவுகள்!
அகவை ஐந்தில் தொடங்கியது! சுய செதுக்கல்!
ஆசான் எனும் கைஉளி கொண்டு!
அம்மையப்பன் உயிர் கொடுத்தார் என்றால், உயிரெழுத்து தந்தது
என் ஆசான்! அகரம் சொல்லி ஏற்றுவித்தார்! இன்று நான் சிகரமாய்!
ஒரு கருவை கருவறையில்
தாய் சுமந்தாள்! பல உருவை அதன் கனவை
வகுப்பறையில் சுமப்பவர் தான்
என் ஆசான்
களர் நிலத்தை தோண்டி எடுத்து
கலை நிலமாய் உழுதவர்தான்
என் ஆசான்!
பிரம்பு பட்டு சிவந்த கரம்,
உதவி செய்து சிவக்கிறது! அன்று கற்பித்த ஒழுக்கத்தால்!
எத்தனையோ வசை பாடி இருக்கிறேன்!
இன்று நினைத்தால் கண்களில் நீர் துளிர்க்கிறது! வாழ்க்கைப் பாடத்தில்
வான் ஏற்றிவிட்டு, வெறும் வரப்பாக நின்று
வேடிக்கை பார்ப்பவர் தான் என் ஆசான்!
9.
கரும்பலகையின் மீது
வெண்ணிற எழுத்துக்களால்
வண்ணமயமான வாழ்க்கையை
எங்களுக்கு அளித்த வாழும் தெய்வம்
10.
ஏறியவன் எங்கோ
மேலேயிருக்க – ஏற்றிவிட்ட
ஏணி மட்டும்
அதேயிடத்தில் அடுத்தவனை
ஏற்றிவிட
காத்திருக்கிறது ? – ஆசிரியர்
11.
அன்று நீங்கள் அடித்த அடிகளால்
இன்று என் வாழ்க்கையே இனிக்கிறது….
இன்று அடிக்க ஆளில்லாமல்
வாழ்க்கையே வெறுமையனது….
வாழ்க்கையில் சிகரம் தொட்ட
அனைத்தது கால்களின்…
முதல் படி நீங்கள் தான்..
12.
ஆசிரியர்கள்
என் ஆறாம் அறிவிற்கு
கல்வி புகட்டி
கூர்மை சேர்த்தவர்கள்.
நாளைய சமுதாயத்திற்கு
நல்லஎண்ணம் போதிப்பவர்கள்.
உலகே வாழ்த்துகிறது
உங்களை நான் வணங்குகிறேன்
13.
எல்லாத்துக்கும் மிக்க நன்றி ஐயா !
உங்கள் சேவைக்கு
நீங்கள் தந்த கல்விக்கு
நன்றி சொல்வது மட்டும் போதாது
நான் என் ஆயுள் முழுவதும்
உங்களுக்கு கடமை பட்டுள்ளேன்
உங்கள் சேவையை என்றும்
மறக்க மாட்டேன் !
நன்றியுடன் உங்களை
நினைத்துப் பார்க்கும்
14.
ஆரம்பம் தாம் – ஞானம்
இல்லாதார்க்கு
ஈகை தாம்
உள்ளத்தின்
ஊனத்தை போக்குவோர் தாம்
எண்ணத்தின்
ஏணி படி தாம்
ஐயத்தை
ஒடுக்க செய்து வாழ்வினை
ஒங்க செய்பவர் தாம்.
15.
சிலையைப் பார்க்கும் கண்கள்
உளியும் கைவிரலும்
பார்ப்பதில்லை
பாராமுகம் நோக்காது
படைப்பையே நோக்கும்
சிற்பி ஆசிரியர்
kidhours – Teacher’s Day Tamil Poem , Teacher’s Day Tamil Poem update , Teacher’s Day Tamil Poems , Teacher’s Day Tamil Poem collection , Teacher’s Day Tamil Poem and greetings
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.