Teachers Day Gifts in Tamil ஆசிரியர் தின பரிசுக்கள்
நண்பர்கள் தினம், காதலர் தினம், சகோதர் தினம் என எத்தனையோ பண்டிகைகள் விழாக்கள் வந்து செல்கின்றனர், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக, ஒவ்வொரு நோக்கத்துடன் கொண்டாடப்படுகிறது.

அந்த வரிசையில், ஒழுக்கம், தன்னம்பிக்கை, பொது அறிவு ஆகியவற்றை கற்பிக்கும் ஆசிரியர்களை சிறப்பிக்கும் வகையில், ஆசிரியர் தினம் உலகளவில் பொதுவாக சீனா, மலேசியா, ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளிலும் கொண்டாடப்படுகிறது.
வருடத்தில் எத்தனையோ விழாக்கள், பண்டிகைகள் வருகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக, ஒவ்வொரு நோக்கத்துடன் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஒருவரை சிறந்த மனிதராக, அறிவுள்ளவர்களாக உருவாக்குபவர்கள் தான் ஆசிரியர்கள்.
அந்த ஆசிரியர்களை சிறப்பிக்கும் வகையில் கொண்டாடப்படும் ஒரு தினம் தான் ஆசிரியர் தினம். பொதுவாக இந்த ஆசிரியர் தினமானது சர்வப்பள்ளி திரு. ராதாகிருஷ்ணன் பிறந்தநாளாகும். இவர் மிகச்சிறந்த தத்துவ மேதை. மாணவர்களுக்கு ஒரு நல்ல கல்வியாளராக இருந்தவர்.
இவரை சிறப்பிக்கும் வகையில் கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்தன்று, நமக்கு நல்லொழுக்கத்தை கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கு, அவர்களது நினைவில் என்று இருக்கும் வகையில் ஒரு பரிசுகளைக் கொடுத்தால், அந்த பரிசை பார்க்கும் போதெல்லாம், அவருக்கு நம் நினைவு வரும் அல்லவா!
மேலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பமான ஆசிரியர்கள் இருப்பார்கள். அந்த ஆசிரியர்களுக்கு என்ன பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பீர்கள்.
1.வாழ்த்து அட்டை (Greetings Cards)
ஆசிரியர் தினத்தை கொண்டாடும் வகையிலான கவிதைகள் அடங்கிய வாழ்த்து அட்டை உங்கள் ஆசிரியர்களுக்கு பரிசளிப்பதன் மூலம் அவர்களை மகிழ்ச்சியடைய செய்யலாம். மேலும், அவர்களது மனதை தொடும் வகையில், நன்றி கூறிய வார்த்தைகளை உங்கள் கைப்பட எழுதி கொடுங்கள்.

2.அழகான பிரத்தியேக மெழுகுவர்த்திகள் (Personalized Candles)
ஒரு அலங்கார மெழுகுவர்த்தி உங்களுக்கு பிடித்த ஆசிரியருக்கு உதவும் ஒரு சிறந்த பொருளாகும் . இந்த நினைவுச்சின்ன மெழுகுவர்த்திகளை உருவாக்குவதற்கான படைப்பாற்றலை ஆசிரியர்கள் பாராட்டுவார்கள்.

ஷட்டர்ஃபிளையின் தனிப்பயனாக்கப்பட்ட மெழுகுவர்த்திகள் கிட்டத்தட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் தனித்துவமான சிந்தனையை பரிசை தருகின்றது . தொலைவில் உள்ளவர்களுடன் நினைவுகளையும் அன்பையும் பகிர்ந்து கொள்ளும்போது வீட்டில் எந்த அறையிலும் ஒளிரச் செய்யுங்கள்
3.தனிப்பயன் கிளிப்போர்டுகள் (Custom Clipboards)
எளிதான ஆசிரியர் பாராட்டு பரிசு யோசனைகளைத் தேடுகிறீர்களா? உங்கள் ஆசிரியருக்கு பரிசுகள் மூலம் உங்கள் பாராட்டுகளை நீங்கள் உண்மையிலேயே காட்ட விரும்பினால்,மதிப்பெண்கள், வீட்டுப் பாடங்கள், சோதனைகள் மற்றும் பிற ஆவணங்களை ஒன்றாக வைத்திருக்க அவர்களுக்கு உதவக்கூடிய அனைத்தும் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

பயணத்தின்போது பல ஆசிரியர்கள் தங்களின் அனைத்து ஆவணங்களையும் வைத்திருக்க வலுவான உலோகக் கிளிப்பைப் பிடிக்கும் கிளிப்போர்டுகளைப் பயன்படுத்துகின்றனர். ஊக்கமளிக்கும் வகையில் பிரத்தியேக கிளிப்போர்டுகளைத் வழங்குவதன் மூலம் ஆசிரியரிடம் “நன்றி” என்று கூறலாம்.
4.கைபனிப்பொருள் – பறவை கூடு (DIY Bird Feeder)
அலங்கார தகடுகளை கொண்டு, உங்கள் ஆசிரியரின் இல்லத்தில் அல்லது வெளியே தொங்கவிடக்கூடிய பறவை தீவன அல்லது கூடுகளை கொடுப்பதன் மூலம் சிட்டுக்குருவிகள் உட்பட பறவைகள் வாழ்வது அல்லது பறப்பதைக் கண்டும் கேட்டும் மகிழ்வார்கள்.

5.வாழ்த்து அட்டை நிறுத்திகள் (Gift card Holder)
தனிப்பயனாக்கப்பட்ட ஹோல்டரை வடிவமைத்து வாழ்த்து அட்டையை உங்கள் ஆசிரியருக்கு நன்றி செய்திகளையும் இயற்கை காட்சி படங்களையும் வைத்து கொடுக்கலாம்

6.புத்தகங்கள் (Books)
உங்கள் ஆசிரியர் ஒரு புத்தகப் பிரியர் என்றால் யோசனையே இல்லாமல் அவர்களுக்கு நல்ல பயனுள்ள ஒரு புத்தகத்தை வாங்கி கொடுத்து விடுங்கள். நிச்சயமாக இதற்கு அவர் நன்றி தெரிவிப்பதுடன், ஆழ்மனதில் இருந்து அன்பை வெளிப்படுத்த கூடும்.

7.பூக்கள் (Flowers)
ஆசிரியர்களை பூக்கள் கொடுத்து வரவேற்கும் பழக்கம், காலம் காலமாக இருந்து வருகிறது..இந்த பரிசு பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமின்றி, பாஸிட்டிவான சூழ்நிலையை உருவாக்கும். மேலும், ஆசிரியரின் மனதை குளிரச் செய்யும்.

8.சாக்லேட் (Chocolates)
சாக்லேட்டுகள் ஒரு சிறந்த பரிசு ஆகும். ஆகவே ஆசிரியருக்கு வித்தியாசமான சுவையுடைய சாக்லெட்டுகளைக் கொடுக்கலாம். மேலும், சாக்லேட்கள் உண்பது மகிழ்ச்சியின் அடையாளம் என்பதையும் தாண்டி, ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

சாக்லெட்களின் சுவை நாம் இருக்கும் சூழலை மறக்க செய்து மகிழ்ச்சியை தர கூடியவை. அப்படி இல்லை என்றால், வீட்டில் இருந்து இனிப்புகளை தயார் செய்து கொண்டு போய் கொடுங்கள்.
9.டைரி மற்றும் பேனா (Diary and Pen)
ஆசிரியர்கள் டைரி மற்றும் பேனாவை அதிகம் உபயோகிப்பார்கள். எனவே இதையும் கிப்ட்டாக கொடுக்கலாம். இதனால் இது ஒரு உபயோகமான பொருளை கொடுத்தது போன்றும் இருக்கும்.

10.சுவாசத்திற்கு பொருத்தமான செடிகள் (Plants Suitable for Respiration)
காற்றை தூய்மையாக்கும் சில வகை செடிகளை வாங்கி உங்கள் அறிவியல் ஆசிரியருக்கு நீங்கள் பரிசளிக்கும் போது அது அர்த்தமுள்ள ஒன்றாக இருக்கும். மேலும் உங்கள் மீது நல்ல பிம்பத்தை ஏற்படுத்தும்.

kidhours – Teachers Day Gifts in Tamil , Teachers Day Gifts in Tamil update
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.