Sea Doctor சிறுவர்களுக்கான உலக செய்திகள்
மனிதர்களாகிய நம்மிடையே பல மருத்துவர்கள் இருப்பதுபோல் மீன்களிலும் மருத்ல மருத்து பகு இருபயிற்று வகை மீன்கள் உள்ளன. இதர பெரிய மீன்களின் மீது ஒட்டி யுள்ள ஒட்டுண்ணிகளை நீக்குவதே இந்த மீன்களின் பணி. டாக்டர்களிலும் கைராசியான டாக்டரிடம் தானே கூட்டம் செல்லும்! அப்படிப்பட்ட கை ராஸி’யான டாக்டர்கள்தான் ‘ராஸ்’ (wrasse) இன மீன்கள்.
இந்த மீன்கள் சுமார் 4 அங்குலம் அளவே இருக்கும்.கடல டியில் காணப்படும் பவளப்பாறைகளே இவற்றின் மருத்துவ மனை. நம்மூர் கிளினிக்குகளில் வரிசையாக நோயாளிகள் காத்திருப்பது போல, இந்த ராஸ் மீன்களின் குடியிருப்பிலும் பல பெரிய மீன்கள் வரிசை கட்டி நிற்கும். ராஸ் மீன்கள், நோயாளி
மீனின் உடம்பில் காணப்படும் ஒட்டுண்ணிகளை உண்டு அவற்றை சுத்தம் செய்கின்றன.
பவளப்பாறை உயிரினங்களிலேயே மிகவும் கொடியவை ஈல் எனப்படும் விலாங்கு மீன்கள்தான். அப்படிப்பட்ட விலாங்கு மீன்களின் வாயில் கூட இவை புகுந்து சிறிதும் பயப்படாமல் சுத்தப்பணியை மேற்கொள்ளும். மருத்துவ சேவைக்காக அந்த ரவுடி மீனும் கடித்துக் குதறாமல் வாயைத் திறந்து காண்பித்துக் கொண்டிருக்கும்.
இத்தனை சிறப்புகள் இருந்தும் இந்த ராஸ் மீன்கள் டாக்டர் மீன்’ என்று அழைக்கப்படுவதில்லை. மனிதர்களின் கால் கைகளில் உள்ள இறந்த செல்களை உண்டு சுத்தம் செய்யும் வேறு சில மீன்களுக்கு அந்தப் பெயரைக் கொடுத்து விட்டார்கள். அதனால், இந்த மீன்களை ‘கடல் டாக்டர்’ என்று அழைக் கிறார்கள்.
Kidhours – Sea Doctor
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.