World’s First Frozen Chocolate சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பரிசில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சொக்கலேட் கண்காட்சியில் உலகின் முதல் ‘உறைப்பான சொக்லேட்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Salon du Chocolate கண்காட்சி ஒவ்வொரு வருடமும் பரிசில் இடம்பெறுகிறமை வாசகர்கள் அறிந்ததே.
இவ்வருடத்துக்கான கண்காட்சியின் போது பிரெஞ்சு சொக்கலேட் தயாரிப்பாளரான Damien Vidal என்பவர் ஒரு புதுவித சொக்கலேட்டினை அறிமுகம் செய்துள்ளார்.
சிறிய உருண்டைகள் போன்ற வடிவில் இருக்கும் இந்த சொக்கலேட்டுகள் வாயில் போட்டதும், முதல் இனிப்பாகவும், பின்னர் மிகவும் உறைப்பாகவும், அதன் பின்னர் மீண்டும் இனிப்பாகவும் மாறும்.
உறைப்பான சொக்கலேட் அறிமுகப்படுத்தப்படுவது இதுவே உலகில் முதன்முறையாகும்.
உலகின் மிக உறைப்பான மிளகாய் என கின்னஸ் சாதனையில் உள்ள Carolina Reaper மிளகாயினை பயன்படுத்தி இவ்வகை சொக்கலேட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக Damien Vidal தெரிவித்தார்.
கண்காட்சிக்கு வரும் பலர் இதனை ஆர்வத்துடன் சுவைபார்த்துச் செல்கின்றனர்.
* 27 ஆவது ஆண்டு Salon du Chocolat கண்காட்சி, நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து, வரும் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 1) நிறைவடைகிறது.
இக்கண்காட்சி Porte de Versailes இல் இடம்பெற்று வருகிறது.
Kidhours – World’s First Frozen Chocolate
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.