US Vice President Car Accident சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் சென்ற கார் சிறிய விபத்தை எதிகொண்டதாக கூறப்படுகிறது. எனினும் இரகசிய சேவை இயக்குநர் கிம் சீட்டில், இந்த சம்பவம் முதலில் இயந்திரக் கோளாறு என்று விவரிக்கப்பட்டதாகக் கூறினார்.

ஆனால், கமலா ஹாரிஸை ஏற்றிச் சென்ற வாகனம் வெள்ளை மாளிகைக்கு சென்று கொண்டிருந்த நிலையில், ஒரு சுரங்கப்பாதைக்குள் செல்லும்போது, சாரதி காரை வேகமாக திருப்பியதால், பக்கவாட்டு தடுப்பின் மீது டயர் மோதியது.
இதனால், காரின் ரயர் உடனடியாக மாற்றப்படவேண்டியதால், காருக்குள் இருந்த கமலா ஹாரிஸ் அந்த வாகனத்திற்கு முன் நின்ற மற்றோரு காருக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எனினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன அணிவகுப்பு வெள்ளை மாளிகைக்கு வந்தபோது, அவருக்கு காயங்கள் ஏதும் இல்லை என்பதை உறுதிப்படுத்த மருத்துவ ஊழியர்களால் பரிசோதிக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தில், எந்த ஒழுங்கு நடவடிக்கையும் இருக்காது என ரகசிய சேவையின் செய்தித் தொடர்பாளர் அந்தோனி குக்லீல்மி கூறியுள்ளார்.
மேலும், “இந்த விவரத்தில் நாங்கள் பெருமைப்படுகிறோம். எங்கள் அதிகாரிகள் இதை எப்படிக் கையாண்டார்கள் என்பது சரியாக இருந்தது” என்று அவர் கூறினார்.
Kidhours – US Vice President Car Accident
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.