Poverty Line People in Sri Lanka சிறுவர்களுக்கான உலக செய்திகள்
2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அந்நாட்டில், அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
பெட்ரோல், டீசல், உணவு பொருட்கள் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் கடுமையாக பொதுமக்கள் அவதியை சந்தித்து வருகின்றனர்.
“இலங்கையில் பல்வேறு குடும்பங்கள் முறையாக உணவு உண்பதற்கே வழியின்றி தவிக்கின்றனர்.
அடுத்த வேளை உணவு கிடைக்குமா என்ற ஏக்கத்தில் பல குழந்தைகள் பட்டினியுடன் இரவு படுக்க செல்கின்றனர்” என ஐநா சபையின் யுனிசெப் அமைப்பு ஆய்வு கவலை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இலங்கையின் தற்போதைய நிலை குறித்து பெரடனியா பல்கலைக்கழக ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில், 2019ஆம் ஆண்டு அதாவது கோவிட் பாதிப்புக்கு முன்னதாக 30 லட்சம் மக்கள் மட்டுமே வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்து வந்தனர். ஆனால், கடந்த 3 ஆண்டுகளில் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடியை தொட்டுள்ளது.
நீடித்து வரும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் தொகையில் 42 சதவீதத்தினர் அதாவது 2.1 கோடி பேர் ஏழ்மை நிலையில் உள்ளனர்.
மேலும், அந்நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.
இந்தாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் சுமார் 500 மருத்துவர்கள் வெளிநாட்டிற்கு குடிபெயர்ந்துள்ளனர். மேலும், 800 மருத்துவர்கள் குடியேற காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.
kidhours – Poverty Line People in Sri Lanka
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.