People dying due to flood உலக காலநிலை செய்திகள்
நைஜீரியாவில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட புதிய எண்ணிக்கையின்படி, நைஜீரியாவில் ஒரு பத்து ஆண்டுகளில் இல்லாத ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தால் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த பேரழிவால் 1.3 மில்லியனுக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்று நைஜீரியாவின் மனித வள அமைச்சகத்தின் அறிக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

“துரதிர்ஷ்டவசமாக, அக்டோபர் 16, 2022 நிலவரப்படி 603 உயிர்கள் பலியாகியுள்ளன” என்று மனிதவள அமைச்சர் சதியா உமர் ஃபாரூக் கூறினார்.
கடந்த வாரத்தில் இந்த எண்ணிக்கை 500 ஆக இருந்தது. ஆனால் சில மாநில அரசுகள் வெள்ளத்தை சமாளிக்க சரியாக தயாராகாததால் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.
வெள்ளம் 82,000 க்கும் மேற்பட்ட வீடுகளையும் கிட்டத்தட்ட 110,000 ஹெக்டேர் (272,000 ஏக்கர்) விவசாய நிலங்களையும் முற்றிலுமாக அழித்துள்ளது.
வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கும் மழைக்காலம், ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மழைப்பொழிவு அதிகரித்துள்ளது என்று தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் (NEMA) தெரிவித்துள்ளது.
2012 இல், ஏற்பட்ட வெள்ளத்தில் 363 பேர் இறந்தனர் மற்றும் 2.1 மில்லியனுக்கும் அதிகமானோர் வெள்ளத்தால் இடம்பெயர்ந்தனர் என்று பதிவுகள் குறிப்பிடுகின்றன.
இந்நிலையில், உள்ளூர் உற்பத்தியைத் தூண்டுவதற்காக அரிசி இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளது.
இதனால் சுமார் 200 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் உணவு பொருட்களின் விலை பாதிக்கலாம் என்று அரிசி உற்பத்தியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
உலக உணவுத் திட்டம் மற்றும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆகியவை கடந்த மாதம் ஆறு நாடுகளில் பசியின் பேரழிவு அபாயத்தை எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக நைஜீரியா இருப்பதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.
Kidhours – People dying due to flood
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.