Friday, January 24, 2025
Homeசிறுவர் செய்திகள்எலிசபெத் மகாராணியின் வைர நகை விற்பனையில் சாதனை Queen Elizabeth's Diamond

எலிசபெத் மகாராணியின் வைர நகை விற்பனையில் சாதனை Queen Elizabeth’s Diamond

- Advertisement -

Queen Elizabeth’s Diamond சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு மிகவும் பிடித்த இளஞ்சிவப்பு வைரம், 453 மில்லியன் ஹாங்காங் டாலர்களுக்கு ($57 மில்லியன்) விற்கப்பட்டது.

Queen Elizabeth's Diamond சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Queen Elizabeth’s Diamond சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இந்த வைரத்தில் காரட் விலையானது, இதுவரை எந்தவொரு ஏலத்திலும் விற்கப்பட்ட வைரத்திற்கான காரட் அளவிலான அதிகபட்ச விலையாகும்.

- Advertisement -

11.15 காரட் கொண்ட வில்லியம்சன் பிங்க் ஸ்டார் வைரம் ஹாங்காங்கில் சோதேபி ஏல நிறுவனம் விற்று புதிய சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

ஹாங்காங் ஏலத்தில் வில்லியம்சன் பிங்க் ஸ்டார் வைரம் 57 மில்லியன் டாலர்களுக்கு விற்பனையானது, சர்வதேச அளவில் பேசப்படுகிறது.

1953 ஆம் ஆண்டில் கார்டியரின் ஃபிரடெரிக் மியூ வடிவமைத்த இந்த வைர நகை, மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு மிகவும் விருப்பமான நகைகளில் ஒன்று ஆகும். தனது வெள்ளி விழா கொண்டாட்டங்கள் உட்பட பல சந்தர்ப்பங்களில் மகாராணி இரண்டாம் எலிசபெத் இந்த நகையை அணிந்திருந்தார்.

இந்த இளஞ்சிவப்பு” வைரமானது 453 மில்லியன் ஹாங்காங் டாலர்களுக்கு ($57 மில்லியன்) விற்கப்பட்டது, அதன் மதிப்பிடப்பட்ட விலையை விட இரண்டு மடங்கு அதிகமாக விற்று புதிய உலக சாதனை படைத்துள்ளது.11.15 காரட் வில்லியம்சன் பிங்க் ஸ்டார் வைரத்தை வாங்கியவர், தனது பெயரை வெளியிட விரும்பவில்லை.

இந்த ஆபரணம், குஷன் வடிவ இரண்டு பெரிய இளஞ்சிவப்பு வைரங்களால் உருவாக்கப்பட்டது. அவற்றில் ஒன்று 59.60 காரட் கொண்டதாகும். வில்லியம்சன் ஸ்டோன், 23.60 காரட் வைரம் இரண்டாம் எலிசபெத் ராணிக்கு திருமண பரிசாக வழங்கப்பட்டது.

இளஞ்சிவப்பு வைரங்கள் மிகவும் அரிதானவை, அவை எப்படி இளஞ்சிவப்பு நிறமாக மாறும் என்பதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

1953 ஆம் ஆண்டில், கார்டியரின் ஃபிரடெரிக் மியூவால் வடிவமைக்கப்பட்ட மலர் வடிவ ப்ரூச் வைர நகை பார்க்கவே பரவசத்தைக் கொடுக்கிறது.

Sotheby’s Asiaவின் நகைகள் மற்றும் கைக்கடிகாரங்களின் தலைவரான Wenhao Yu இளஞ்சிவப்பு நிற வைரங்களைப் பற்றி என்ன கூறினார் தெரியுமா?

“எந்த அளவிலும் ஒரு ரத்தினத் தரமான இளஞ்சிவப்பு வைரத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் அரிதான நிகழ்வாகும்” எனவே இதன் மதிப்பு மிகவும் உயர்ந்தது என்று சோத்பி ஏசியாவின் தலைவர் தெரிவித்ததாக The Guardian பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

ஆர்கைல் என்பது மேற்கு ஆஸ்திரேலியாவின் தொலைதூர வடக்கில் உள்ள ஒரு வைரச் சுரங்கமாகும், அரிய வகை வைரங்கள் இங்கு கிடைத்து வந்தன. இந்த சுரங்கம் 37 வருட செயல்பாட்டிற்குப் பிறகு 2020 இல் மூடப்பட்டது.

இனி இளஞ்சிவப்பு நிற வைரங்கள் கிடைக்குமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

 

Kidhours – Queen Elizabeth’s Diamond , Queen Elizabeth’s Diamond sale

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.