Missile Attack on Power Plant சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உக்ரைனின் தலைநகரில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தின் மீது ரஷ்யா ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 8 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல நகரங்கள் உருக்குலைந்து போயுள்ளன.
இந்த நிலையில் கீவ் நகரில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தின் மீது நேற்று ரஷ்ய துருப்புக்கள் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தின.

இதில் அங்கு மிகப்பெரிய அளவில் தீப்பற்றியது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இருப்பினும், இந்த தாக்குதலில் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என கீவ் நகர கவர்னர் ஒலெக்சி குலேபா தெரிவித்தார்.
மக்கள் வசிக்கும் பகுதிகளில் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பை துண்டிக்க ரஷ்ய துருப்புக்கள் முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
மின் உற்பத்தி நிலையில் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்யும் பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கீவ் நகரில் வசிப்பவர்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள 3 பிராந்தியங்களை சேர்ந்த மக்கள் மாலை நேரங்களில் மின்சாரத்தை குறைவாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Kidhours – Missile Attack on Power Plant
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.