In intelligence capacity சிறுவர்களுக்கான உலக செய்திகள்
வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் பல்வேறு அதிசயங்களும் ஆச்சரியங்களும் அவ்வப்போது அரங்கேறி நம்மை பிரம்மிப்பிற்கு உள்ளாகி வருகிறது. அந்த வகையில் நம் அனைவரையும் ஆச்சரியத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளான் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பதினோரு வயது சிறுவன்.
யூசுஃப் ஷா என்கிற சிறுவன் நுண்ணறிவு திறண் அளவீட்டு எண்ணில் அறிவியல் மேதைகள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாவ்கிங்கை பின்னுக்குத் தள்ளி அசத்தியுள்ளான்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஹாவ்கிங் ஆகியோரின் நுண்ணறிவு திறன் அளவீட்டு எண் 160 ஆக இருக்கும் நிலையில் சிறுவன் யூசுஃப்-ன் நுண்ணறிவு திறன் அளவீட்டு எண் 162 ஆக அளவிடப்பட்டுள்ளது.
சிறுவன் யூசுஃப் விக்டன் மூர் தொடக்கப்பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். ஒருவரின் நுண்ணறிவு திறனை அறிய உதவும் மென்சா டெஸ்டிற்கு யூசுஃப் தயாராகி வருகிறார். அதோடு அவரின் உயர்கல்விக்கான தயாரிப்பிலும் யூசுஃப் ஈடுபட்டு வருகிறார்.
மிகவும் கடினமான ஐக்யூ தேர்வுக்கு சிறப்பாக எந்த தயாரிப்பையும் செய்யவில்லை எனவும், எப்பொழுதும் மேற்கொள்ளும் தயாரிப்புகளை மட்டுமே செய்து வருவதாகவும் கூறுகிறார் யூசுஃபின் தந்தை இர்ஃபான்.
அதோடு எவ்வளவு தான் திறமைசாலியாக இருந்தாலும் கடின உழைப்பு முக்கியம் என்பதை தனது மகனுக்கு அறிவுறுத்தி வருவதாகவும் இர்ஃபான் கூறியுள்ளார்.
வரும் காலத்தில் யூசுஃப் கேட்பிரிட்ஜ் அல்லது ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் கணிதம் படிக்கத் திட்டமிட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அதே நேரம் தனது உயர்நிலை பள்ளிப் படிப்பையும் யூசுஃப் படிக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மூளைக்கு வேலை கொடுக்கும் எந்த சவாலான வேலையையும் செய்ய எப்போதும் தான் விருப்பத்துடன் தயாராக இருப்பதாகவும் கூறும் யூசுஃப், எண்ணியல் குறுக்கெழுத்திற்கு விடை காண்பதிலும், ரூபிக் கியூபை கையாள்வதிலும் எப்போதும் தான் ஆர்வமாக இருப்பதாகவும் கூறுகிறார்.
நர்சரிப்பள்ளியிலேயே கணக்குப்பாடங்களையும் மற்ற பாடங்களையும் மற்ற சிறுவர்களை விட மிக விரைவாக முடிக்கும் தனது மகனின் திறமையை தான் கண்டு கொண்டதாகவும், தனது மகனை நினைத்து தான் மிகவும் பெருமை கொள்வதாகவும் கூறுகிறார் யூசுஃபின் தாய்.
இதற்கு முன்னதாக இதே இங்கிலாந்தில் கடந்த 2017ஆம் ஆண்டு பிரிட்டனில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பதினோரு வயது சிறுவன் அர்னவ் சர்மா என்கிற சிறுவன் மென்சா தேர்வில் 162 நுண்ணறிவு திறன் குறியீட்டு எண் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
Kidhours – In intelligence capacity, In intelligence capacity update
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.