Saturday, November 30, 2024
Homeசிறுவர் செய்திகள்கூகுள் க்ரோம் குறித்து அதிர்ச்சி அறிக்கை Google Chrome Update

கூகுள் க்ரோம் குறித்து அதிர்ச்சி அறிக்கை Google Chrome Update

- Advertisement -

Google Chrome Update சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

இந்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அக்டோபர் 5 2022 வரையிலான தரவுகளை வைத்து, Atlas VPN என்ற ஆய்வு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Google Chrome Update சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Google Chrome Update சிறுவர்களுக்கான உலக செய்திகள்

அதில், இந்த அக்டோபரின் ஐந்து நாள்களில் மட்டும் புதிய பாதிப்புகளை கொண்ட ஒரே பிரௌசர் என்றால், அது கூகுள் க்ரோம்தான் என தெரிவித்துள்ளது. CVE-2022-3318, CVE-2022-3314, CVE-2022-3311, CVE-2022-3309, CVE-2022-3307 என பாதிப்புகளையும் சுட்டிக்காட்டியுள்ளது.

- Advertisement -

Common Vulnerabilities and Exposures என்பதன் சுருக்கமான CVE செயல்பாடு, பல தளங்களில் இருக்கும் பாதுகாப்பு குறைப்பாடுகள் மற்றும் பாதிப்புகளை கண்காணிக்கிறது.

- Advertisement -

கூகுள் நிறுவனத்தின் க்ரோம் பிரௌசரில் 2022ஆம் ஆண்டில் மட்டும் 303 பாதிப்புகளும், ஒட்டுமொத்தமாக 3,159 பாதிப்புகளும் கண்டறியப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பாதிப்புகள் சுட்டிக்காட்டப்பட்டாலும், அவற்றை இன்னும் விளக்கமாக எடுத்துரைக்கவில்லை. இருப்பினும், கணினியின் மெமரியை சிதைக்கும் அளவிற்கு இந்த பாதிப்புகள் வழிவகுக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் க்ரோமின் புதிய வெர்ஷனுக்கு (Version 106.0.5249.61.) அப்டேட் செய்து பயனாளிகள் இந்த பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கூகுள் க்ரோமிற்கு அடுத்த இடத்தில், மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ் 117 பாதிப்புகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. மைக்ரோசாப்ட் எட்ஜ் 103 பாதிப்புகள் உடன் மூன்றாவது இடத்தில் உள்ளன.

அது தொடங்கப்பட்ட தேதியில் இருந்து கடந்த அக். 5ஆம் தேதிவரை மட்டும் 806 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

அடுத்த இடத்தில் சஃபாரி (Safari) வெறும் 26 பாதிப்புகளை கொண்டுள்ளது. அது ஆரம்பிக்கப்பட்ட ஆண்டில் இருந்து மொத்தம் 1,139 பாதிப்புகள் அதில் இருந்துள்ளது.

ஓப்ரா (Opera) பிரௌசரில் இந்தாண்டு எந்த பாதிப்புகளும் கண்டறியப்படவில்லை. மொத்தமாகவே, அதில் 244 பாதிப்புகள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது.

 

Kidhours – Google Chrome Update

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.