Dirtiest Man in the World பொது அறிவு செய்திகள்
உலகின் அழுக்கு மனிதராக கருதப்பட்ட ஈரானைச் சேர்ந்த அமவு ஹாஜி என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மரணமடைந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அத்தோடு 94 வயதான அவர் அரை நூற்றாண்டுக்கும் மேலாக குளிக்காமல் தனிமையில் இருந்து வந்துள்ளார். இதனால் அவர் உலகின் அழுக்கு மனிதர் என்று அழைக்கப்பட்டார்.

ஈரான் தெற்கு மாகாணமான ஃபார்ஸில் உள்ள தேஜ்கா கிராமத்தில் வசித்து வந்த ஹாஜி உடல் நிலை சரியில்லாமல் போய்விடும் என்ற அச்சத்தால் பல ஆண்டுகளாக குளிக்காமல் இருந்து வந்துள்ளார்.
ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராமவாசிகள் சிலர் ஹாஜியை அழைத்துச் சென்று குளிக்க வைத்தனர்.
இந்நிலையில் ஹாஜி காலமானார். கடந்த 2013ம் ஆண்டில் “தி ஸ்ட்ரேன்ஜ் லைப் ஆப் அமவு ஹாஜி” என்ற தலைப்பில் சிறு ஆவணப்படம் ஒன்றும் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Kidhours – Dirtiest Man in the World
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.