Dangerous Electric Ant பொது அறிவு செய்திகள்
மின்சார எறும்பு (fourmi électrique) என அழைக்கப்படும் மிக ஆபத்தான எறும்பு வகை ஒன்று பிரான்சில் முதன் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த எறும்பு வகையானது தென் அமெரிக்காவைச் சேர்ந்தது. கடந்த வருட இறுதியில் ஐரோப்பாவில் கண்டறியப்பட்ட இந்த எறும்புகள் தற்போது பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வகை எறும்புகள் கடித்தால் உடலில் மின்சாரம் பாய்வது போல் இருக்கும் என்பதால், அதற்கு ‘மின்சார எறும்புகள்’ என பெயரிடப்பட்டுள்ளதாக பிரான்சின் பல்லுயிர் மற்றும் சூழலியல் பாதுகாப்புச் சபை அறிவித்துள்ளது.
கடந்தவாரத்தில் Toulon நகரில் இவ்வகை எறும்புகள் கண்டுபிடிக்கப்பட்டது.
மருத்துவக்குழு இது தொடர்பாக தெரிவிக்கும் போது, இவ்வகை எறும்புகள் கடித்தால் அப்பகுதியில் எரிவு தன்மை ஏற்படும் எனவும் இரண்டில் இருந்து மூன்று மணிநேரங்களுக்கு உடலில் வலி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kidhours – Dangerous Electric Ant
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.