Cylinder Exploded சிறுவர்களுக்கான உலக செய்திகள்
5 மாடிகளை கொண்ட குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் உள்ள ஒரு வீட்டில் நேற்று அதிகாலை கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இச் சம்பவம் ரஷியாவின் தென்கிழக்கு பகுதியில் சகலின் தீவில் உள்ள திமோவ்ஸ்கோய் நகரில் இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவத்தின் போது கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாக உள்ளது.
இக் கட்டிடம் 1980ல் கட்டப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதில் பெண்கள், சிறுவர்கள் உள்பட ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதகாவும் இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும்
பொலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணிகளில் இறங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த விபத்தில் 9 பேர் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்துள்ளதோடு அவர்களில் நாள்வர் சிறுவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பலர் படுகாயம் அடைந்ததோடு அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Kidhours – Cylinder Exploded
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.