7 Persons Death Penalty சிறுவர்களுக்கான உலக செய்திகள்
குவைத்தில் 7 பேருக்கு ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அந்த நாட்டில் இது போன்ற கூட்டு மரண தண்டனை நிறைவேற்றம் மிகவும் அபூா்வம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அரசுக்குச் சொந்தமான செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி, பல்வேறு குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர் மத்திய சிறைச் சாலையில் நேற்று தூக்கிலிடப்பட்டனா்.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவா்களில் 3வர் குவைத் நாட்டு ஆண்கள், ஒரு குவைத் நாட்டுப் பெண், ஒரு சிரியா நாட்டவா், ஒரு பாகிஸ்தானியா், ஒரு எத்தியோப்பிய பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதா்களின் மிகவும் புனிதமான உரிமையாகிய உயிா்வாழும் உரிமையை அவா்கள் பிறரிடமிருந்து பறித்ததால் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அரசுத் தரப்பு நீதித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக 2017 ஜனவரி 25ஆம் திகதி அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 7 பேர் தூக்கிலிடப்பட்டனர்.
இந்த தண்டனைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆம்னெஸ்டி பொது மன்னிப்பு சபை, ‘இதுபோன்ற தண்டனைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இவை கொடூரமானவை, மனிதத்தன்மையற்றவை மற்றும் கீழ்த்தரமானவை’ என்று விமர்சித்துள்ளது.
இந்த மரண தண்டனை நிறைவேற்றத்து ஐரோப்பிய யூனியன் கண்டனம் தெரிவித்துள்ளது. குவைத்தில் 1960 தொடங்கி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Kidhours – 7 Persons Death Penalty
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.