21 People Died in the Bus Fire சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பாகிஸ்தானில் பஸ் ஒன்று தீ பிடித்து எரிந்ததில் குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 40ற்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் நூரியா பாத் பகுதியில் நள்ளிரவு சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றில் சுமார் 60-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். அப்போது பஸ்ஸில் திடீரென்று தீப்பிடித்தது.
இதனால் பஸ்ஸை சாரதி நிறுத்தியுள்ளார். ஆனால் தீ வேகமாக பஸ் முழுவதும் பரவியது.
பயணிகள் சிலர் பஸ்சின் கண்ணாடிகளை உடைத்து கீழே குதித்து தப்பியுள்ளர்.
ஆனால் பஸ்ஸுக்குள் சிக்கி கொண்ட குழந்தைகள் உட்பட 21 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனள். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம்டைந்துள்ளனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பஸ்ஸில் பிடித்த தீயை அணைத்தனர். பஸ்ஸில் இருந்த குளிர்சாதன பகுதியில் தீப்பிடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
தீப்பிடித்த பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்தவர்களாவார்கள். அண்மையில் பாகிஸ்தானில் பெய்த கடும்மழையால் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தால் மூழ்கின.
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு கராச்சியில் தங்க வைக்கப்பட்டனர். வெள்ள பாதிப்பு குறைந்ததால் கராச்சியில் இருந்து சைர்பூர் நாரன் ஷா பகுதிக்கு மக்கள் பஸ்ஸில் சென்ற போது விபத்தில் சிக்கினர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் எனத் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
Kidhours – 21 People Died in the Bus Fire
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.