Friday, February 7, 2025
Homeசிறுவர் செய்திகள்1000 ஆண்டுகள் சிறை தண்டனை - 1000 Years Imprisonment

1000 ஆண்டுகள் சிறை தண்டனை – 1000 Years Imprisonment

- Advertisement -

1000 Years Imprisonment  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் வாகனத்தை மோதவிட்டு 6 பேர்களை கொன்ற நபருக்கு சிறை தண்டனை விதித்த பின்னர், பெண் நீதிபதி கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.

குறித்த வழக்கில், ஏதோ ஒரு வகையில் தாம் தொடர்பு படுத்திக்கொள்ள நேர்ந்ததாகவும், அச்சம்பவம் இதயத்தை நொறுக்குவதாக உள்ளது எனவும் நீதிபதி ஜெனிபர் டோரோ தெரிவித்துள்ளார்.

- Advertisement -

விஸ்கான்சின் மாகாணத்தில் 2021 நவம்பர் மாதம் இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தின் நடுவே மக்கள் மீது வாகனத்தை மோதவிட்டு 8 வயது சிறுவன் உட்பட 6 பேர் பலியாக காரணமானார் Darrell Brooks.

- Advertisement -

அத்துடன் 62 பேர்கள் காயங்களுடன் தாப்பியுள்ளனர். இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், குறித்த நபருக்கு 6 ஆயுள் தண்டனையும், அத்துடன் அடையாளமாக 1,067 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

1000 Years Imprisonment  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
1000 Years Imprisonment  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

 

குற்றவாளிக்கு உரிய தண்டனை அளிப்பது, சமூக மக்களுக்கு பாதுகாப்பான மன நிலையை உருவாக்குவது மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவது இவை மூன்றுமே அவ்வாறான ஒரு தீர்ப்பை அளிக்க தூண்டியதாக நீதிபதி ஜெனிபர் டோரோ தெரிவித்துள்ளார்.

நீதிபதி ஆறு ஆயுள் தண்டனை வழங்குவதாக தீர்ப்பை அறிவித்ததும், நீதிமன்றத்தில் திரண்டிருந்த மக்கள் கரவொலி எழுப்பியுள்ளனர். தீர்ப்பை அறிவிக்க தொடங்கியதும் குற்றவாளியான Darrell Brooks தலை குனிந்து பைபிள் வாசிக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

மேலும், திரண்டிருந்த மக்கள் சாட்சியாக நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியதாகவும் கூறப்படுகிறது. மொத்தம் 6 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் Darrell Brooks பிணையில் வெளிவர முடியாது என்றே கூறப்படுகிறது.

 

Kidhours – 1000 Years Imprisonment

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.