Sunday, July 7, 2024
Homeகல்விபுவியியல்புவியியல் என்றால் என்ன ? கட்டுரை # World TamilGeography

புவியியல் என்றால் என்ன ? கட்டுரை # World TamilGeography

- Advertisement -

Tamilgeography சிறுவர் கல்வி புவியியல்

- Advertisement -

நம் பூமியை பற்றி அறிந்து கொள்ளும் படிப்பு புவியியல் எனப்படும். எவ்வித பொருள்களால் பூமி உருவானது, அப்பொருள்களின் வடிவங்கள் என்ன, எவ்வாறு உருவாகின்றன என்று ஆராய்வதே புவியியலின் சாராம்சமாகும். பூமியில் புழங்கிய உயிரினங்கள் பற்றிய விவரங்களும் புவியியலின் அங்கமாகும். ஆக, புவியியலின் சிறப்பம்சம், பூமியில் உள்ள பொருள்கள், பொருள்களின் உருவாக்கம் மற்றும் உயிரினங்கள் பற்றி அறிந்து கொள்வதாகும்.

புவியியல் என்பது பல பிரிவுகள் அடங்கிய விஞ்ஞானமாகும். பூமியின் இயற்பியல் மற்றும் வேதியியல் கூறுகளை ஆராய்வதோடு நில்லாமல் பூமி தளத்தின் செயல்பாடு, உருவாக்கம், மற்றும் மூலத்தை பற்றிய கல்வி இது. இதன் மையம் பூமியில் பரவி கிடக்கும் தாதுப்பொருள்களின் உருவாக்கம் மற்றும் விநியோகத்தை சுற்றியே இருக்கிறது.

- Advertisement -

புவியியலை அறிந்துக்கொள்ளும் அவசியம் என்ன ?

- Advertisement -

இந்த கேள்விக்கு பல்வேறு விதமாக பதில் உரைக்கலாம். புவியியல் வல்லுநர் பற்பல ஆராய்ச்சிகள் மேற்கொள்கிறார். எரிபொருள் சிக்கணம் மற்றும் வானிலை மாற்றத்தை முன்னிறுத்தியே அவர் செய்கைகள் அமையும். இதே போல் பூமியில் எரிபொருள்கள் மூலங்களை கண்டறிவது, வளங்களை செவ்வனே பயன்படுத்துதல், மற்றும் மக்கள் மத்தியில் எரிபொருள் சிக்கனத்தை பற்றிய விழிப்புணர்சியை பரப்புவது போன்றவை அவர் தலையாய வேலையாகும். தற்போது உலகம் முழுவதும் பயணத்திற்கும், உற்பத்திக்கும் பயன்படும் எண்ணை வளம் சார்ந்த புவியியல் ஆராய்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. புவியியல் அறிஞர்கள் எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளை முன்கூட்டி அறிந்து, அதை தெரிவிப்பதால் மக்களை பாதுகாக்கும் பணியையும் செய்கிறார்கள்.

புவியியலின் கால அளவுகோல்கள் 

புவியியலின் கால அளவுகோல் பூமி தோன்றி 4.5 கோடி ஆண்டுகளுடன் தொடங்குகிறது. சமகாலத்தில் ஆரம்பித்து கீழே செல்ல செல்ல புவியியலின் வரலாறு அளவுகோலில் இடம் பெற்றுள்ளது. மிக நீண்ட கால இடைவெளியில் தொடங்கி , சகாப்தம், காலகட்டம், என புவியலின் அளவு கோல் வரையறுக்கப்பட்டுள்ளது. எடுத்துகாட்டாக 570 கோடி ஆண்டுகள் முன்புள்ள பூமியின் ஆரம்ப நிலை புவியியல் வரலாறாக கருதப்படுகிறது. இந்த காலகட்டம் “ஃபினார்சானிக் காலம்” என அழைக்கபடுகிறது.

tamil geography புவியியல் என்றால் என்ன கட்டுரை kidhours
புவியியல் என்றால் என்ன கட்டுரை kidhours siruvar kalvi puviyiyal

மூன்று சகாப்தங்களாக “ஃபினார்சானிக் காலம்” வகுக்கப்படுகிறது. இதில் சமீப கால சகாப்தம் “சினோசோனிக் சகாப்தம்” என்று அழைக்கப்படுகிறது. ஃப்ளோரிடா” நகரில் பூமி தளத்திற்க்கு சில நூறு அடிகள் ஆழத்தில் காணப்பட்ட பாறைகள் மற்றும் நீர் நிலைகள் இந்த சகாப்தத்தை சேர்ந்ததாகும். “சினோசோனிக் சகாப்தம்” மேலும் இரு வகை காலமாக பிரிக்கப்படுகிறது. அவை மூன்றாம் மற்றும் நான்காம் நிலை காலங்கள் என அறியப்படுகின்றன. இது போல் புவியியல் அறிஞர்கள் ஒவ்வொரு காலதிற்கும் ஒரு குறிப்பிட்ட பெயர்களை அளித்துள்ளார்கள். இந்த பெயர்கள் அந்தந்த காலத்தில் வாழ்ந்த உயிரினங்கள் சார்ந்து அமைக்கப்பட்டன.

உதாரணத்திற்கு “செனோசோனிக்” என்றால் புதிய உயிர் ” என்று பொருள். அக்காலத்தில் தான் பாலூட்டிகள், பறவைகள், பூச்சிகள் மற்றும் பூக்கள் தோன்றும் செடிகள் நவீன வடிவில் உருவாகின. “ரேடியோ மெட்ரிக்” எனும் துல்லிய நுணுக்கங்கள் மூலமாக அறிஞர்கள் புவியியல் மாற்றங்களை மிகச்சரியாக கணித்தார்கள். பொட்டாஷியம் போன்ற மக்கிய பொருள்கள் மற்றும் கதிவீச்சுகள் அளவுகளையும் ஒப்பிட்டு பாறைகளின் வயதை மிக சரியாக அறிஞர்கள் அனுமானித்தார்கள். புவியியல் கால எல்லைகளை விளக்கும் விதமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தை காணுங்கள்.

புவியியல் அறிஞர்களின் பணி என்ன ?

பெரும்பாலும் நம் பூமியின் சரித்திரத்தை அறிந்துகொள்ளும் முயற்சியில் அறிஞர்கள் ஈடுபடுகிறார்கள். இவ்வாறு அறிந்துகொள்ளும் சரித்திரத்தின் மூலம் எதிர்காலத்தில் பூமியை பாதிக்ககூடிய செயல்களை அவர்கள் கணிக்கிறார்கள்.

புவியியலின் சிறப்பு பிரிவுகள்

அறிஞர்கள் புவியியலில் உள்ள கீழ்காணும் பிரிவுகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்கிறார்கள்.

பொருளாதார புவியியல் – உலோக மூலப்பொருளின் கூறுகளை ஆராய்தல். அவை உருவாகும் இயக்கமுறையை பற்றி அறிந்துகொள்ளுதல்.

tamilgeography புவியியல் என்றால் என்ன கட்டுரை kidhours kalvi
புவியியல் என்றால் என்ன கட்டுரை siruvar neram geography in tamil

பொறியியல் புவியியல் – புவியியல் விஞ்ஞானத்தை பொறியியல் சாத்தியகூறுகள் மூலம் அறிந்து கொள்ளுதல். கட்டுமானம், இருப்பிடம், பொறியியல் செயல்பாடுகள் ஆகிவற்றை பாதிக்கும் புவியியல் காரணிகள் பற்றி அறிந்து கொள்ளுதல்.

புவி இயற்பியல் – புவியீர்ப்பு, பூமியின் செயல்பாடுகள் , மின்சாரம், மற்றும் பூமியின் காந்த உடைமைகளில் இயற்பியலின் பயன்பாட்டை பற்றி அறிந்து கொள்ளுதல்.

புவி வேதியியல் – பூமியில் அமைந்துள்ள பாறைகளின் வேதியியல் உட்கூறு மற்றும் அவற்றில் காணப்படும் தாதுப்பொருள்களில் இருக்கும் வேதியியல் அணுக்களை பற்றி அறிந்து கொள்ளுதல்.

புவியியல் காலவரிசை – பாறைகளின் தோன்றுகாலம், வடிவமாற்றம் மற்றும் அவற்றில் உள்ள தாதுக்களை பற்றி தீர்மானித்து அறிந்து கொள்வது.

புவி உருவியல் – நில அமைப்புகள் மற்றும் அவை தோன்றிய விதங்களை பற்றி அறிந்து கொள்வது.

நீர் புவியியல் – பூமிக்கடியில் உள்ள நீர் நிலைகள், அவற்றின் மூலம் மற்றும் இயக்கம் பற்றி அறிந்து கொள்வது.

உஷ்ணம் சார்ந்த புவியியல் – பூமியின் உஷ்ண வேறுபாடுகள், எரிமலைகளின் உஷ்ண சமன்பாடுகள்,உஷ்ண செயல்பாடுகள் பற்றி அறிந்து கொள்வது.

தாங்கு தட்டு புவியியல் – பாறைகளின் அமைப்பு, மற்றும் பூமிக்கடியில் அமைந்துள்ள தட்டுகளின் அழுத்தம் , செயல்பாடுகள் ஆகிவற்றை அறிந்து கொள்வது.

பாறைக்கூறு புவியியல் – பாறைகள் மற்றும் தாதுப்பொருள்களின் கூறுகளால் ஏற்படும் மாற்றங்களை பற்றி ஆராய்வது.

கடலியல் சார்ந்த புவியியல் – கடல்களின் அடிமட்டத்தில் படிந்துள்ள இயற்பியல், வேதியியல் அணுக்கூறுகள் மற்றும் கடற்கரையில் காணப்படும் படிவங்களை பற்றி அறிந்து கொள்வது. கடற்புவியியல் கடல் இயற்பியல் மற்றும் பூமி தட்டு அறிவியலுடன் மிக நெருங்கிய தொடர்பு உடையது.

வானிலை புவியியல் – பூமியின் வரலாற்றிக்குட்பட்ட சீதோஷன நிலைகளை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு அவற்றால் பூமியின் மீது ஏற்படும் பாதிப்புகளை அறிந்து கொள்வது.

புராதன புவியியல் – பூமி வாழ் உயிரினங்களின் எச்சங்களை ஆராய்ந்து, அவற்றின் காலகட்டத்தின் புவியியல் செயல்பாடுகளை அறிந்து கொள்வது.

மண் புவியியல் – மண் சார்ந்த அமைப்பு மற்றும் மண் தரங்களை பற்றிய ஆராய்ச்சி.

பெட்ரோலியம் புவியியல் – ஹைட்ரோகார்பன் தேடுதலில் சமந்தப்பட்ட, பூமியின் அடித்தட்டு படிமங்கள் பற்றி அறிந்து கொள்வது.

படிம புவியியல் – பூமியின் கீழ் மட்டத்தில் அமைந்துள்ள பாறை தட்டுக்கள் மற்றும் சமகால பாறை படிவங்கள் பற்றி ஆராய்ச்சி செய்து வேறுபாடுகளை அறிந்து கொள்வது.

அமைப்பு புவியியல் – புவியியல் சார்ந்த பொருள்களின் அமைப்பு வடிவங்கள் பற்றி அறிந்து கொள்வது.அவற்றின் வரலாற்றை அலசுவது.

எரிமலை புவியியல் – எரிமலைகளின் வெப்ப அளவு, குழம்புகளின் அமைப்பு, மற்றும் மிச்சங்களை பற்றியும் அவற்றின் செயல்பாடுகள் பற்றியும் அறிந்து கொள்வது

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

 

kidhours

tamil,tamil to english,how tall is peppa pig,TamilGeography website,how tall is kevin hart,how tall is ariana grande,TamilGeography world news,global TamilGeography ,TamilGeography  knowledge
,how tall is mount everest,how tall is the eiffel tower,how tall is kendall jenner,tamil nadu
,tamil news,how tall is levi,tamil movies,tamil translation,tamil language,tamil songs
,tamil rockers.com,TamilGeography news,TamilGeography students in india,TamilGeography teacher

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.