Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the rank-math domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/kidhou5/public_html/wp-includes/functions.php on line 6114
புவியின் உட்கட்டமைப்பு # TamilGeography Earth layers - சிறுவர்களுக்கான அறிவுத்திறன் வளர்ச்சிக்குரிய வழிகாட்டல்கள்
Sunday, November 24, 2024
Homeகல்விபுவியியல்புவியின் உட்கட்டமைப்பு # TamilGeography Earth layers

புவியின் உட்கட்டமைப்பு # TamilGeography Earth layers

- Advertisement -

Tamilgeography Earth Layers in tamil  சிறுவர் கல்வி- புவியியல்

- Advertisement -

புவியின் உள்ளமைப்பு பற்றிய தகவல்களை புவிச்சரிதவியலாளர்கள் ஆரம்பத்தில் எரிமலை கக்குகைகள் மூலம் பெறப்பட்ட பொருட்களிலிருந்து பெற்றுக் கொண்டனர். புவியின் உள்ளமைப்பு பற்றி அறிவதற்கு இன்று அறிஞர்களுக்கு உதவியாக இருப்பது புவிநடுக்கவியல் தரவுகளாகும். அவர்கள் கண்டறிந்த முடிவுகளின் படி புவியின் உள்ளமைப்பில் 3 படைகளை கொண்டு காணப்படுகின்றது. அவையாவன:

புவியோடு (Earth Crust)
இடையோடு/மான்ரில் படை (Mantle)
கோளவகம் (core)

- Advertisement -
tamilgeograohy earth layers
புவியின் உட்கட்டமைப்பு

புவியோடு

- Advertisement -

புவியின் மேற்படையே புவியோடு ஆகும். இது கடினமான கற்கோளமாக காணப்படுகின்றது. இப்புவியோடு 5-70 கிலோமீட்டர் ஆழத்தினை கொண்டுள்ளது. இதன் தடிப்பு 10-50 கிலோமீட்டர் ஆகும். புவியோடு கண்டஓடு, சமுத்திர ஓடு ஆகியவற்றினை கொண்டுள்ளது. இங்கு மக்னீசியம், சிலிக்கேற்று முதலானவற்றால் ஆன தீப்பாறைகளை கொண்டு அமைந்துள்ளது. கண்ட ஓடு அதிகளவில் சிலிக்கா மற்றும் அலுமினியம் போன்றவற்றை கொண்டிருப்பதால் சீயல் படை என அழைக்கப்படுகின்றது.

கண்ட ஓட்டின் அடர்த்தி 2.7g/cm3 ஆகவும் அதன் தடிப்பு 30 கிலோமீட்டர் உடையதாகும். கண்ட ஓட்டினுடைய மேல் அரைப்பகுதியையும் கீழ் அரைப்பகுதியையும் பிரிக்கும் எல்லையாக கொன்ராட் இடைவெளி எனப்படும்.

சமுத்திர ஓடு அதிகளவில் சிலிக்கா மற்றும் மக்னீசியத்தை கொண்டிருப்பதால் அது சீமா படை என அழைக்கப்படுகின்றது. இதன் அடர்த்தி 3.0g/cm3 ஆகும். புவியோடையும் இடையோட்டையும் பிரிக்கும் எல்லை மோகோ இடைவெளி ஆகும்.புவியோட்டில் இருக்கும் பாறை இற்றைக்கு 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது.
இடையோடு

tamilgeography earth layers kidhours புவியின் உட்கட்டமைப்பு
tamilgeography earth layers kidhours புவியின் உட்கட்டமைப்பு

புவியோட்டுக்கு கீழே வேறுபட்ட பாறைகளை கொண்ட ஒரு படையாக இது காணப்படுகின்றது. இவ் இடையோட்டினை மான்ரில்படை, மூடு பாறை என அழைப்பார்கள். இடையோடு 2890 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது. இங்கு சிலிக்கேற்று பாறைகள் காணப்படுகின்றன. புவி நடுக்க அலைகளான Pஅலை, S அலை ஆகியன புவிநடுக்கத்தின் போது இடையோட்டின் மூலம் ஊடறுத்து செல்லும்.

இதன் உள்ளே வெப்பநிலையானது மாறுபட்ட தன்மையில் காணப்படும். ஆனால் வெப்பநிலை அதிகமாகவே இருக்கும். குறிப்பாக பாறைக்குழம்புகள் 1400-4000 செல்ஸியஸ் வரை நிலைத்திருக்கும். இடையோடு 2 வைப்பதும்.

மேல் இடையோடு (Upper mantle) மற்றும் கீழ் இடையோடு (Lower mantle)

மேல் இடையோடு புவியின் எல்லையில் இருந்து 650 கிலோமீட்டர் வரையில் பரந்திருக்கும். இதன் அடர்த்தி 3.4-4.3g/cm3 ஆக காணப்படுவதுடன் வெப்பநிலையானது 1400-3000 செல்ஸியஸ் வரையில் காணப்படுகின்றது.

கீழ் இடையோடு மேல் இடையோட்டின் எல்லையில் இருந்து குறிப்பாக 650-2900 கிலோமீட்டர் வரையிலும் கீழ் இடையோடு அமைந்து காணப்படுகின்றது. இதன் அடர்த்தி 4.3-5.4 g/cm3 ஆகவும் சராசரி வெப்பநிலை 3000 செல்ஸியஸ் ஆகும். இடையோட்டையும் கோளவகத்தையும் பிரிக்கும் எல்லையாக கூட்டன் பேர்க் காணப்படுகின்றது.

கோளவகம்

இடையோட்டுக்கு கீழ் காணப்படுவது கோளவகம் எனப்படும். கோளவகம் நிக்கல், இரும்பு என்னும் உலோகங்களின் சேர்வினை கொண்டுள்ளது. இவை 80% பரம்பியுள்ளது. இது புவியின் மேற்பரப்பில் இருந்து 2900 – 6378 கிலோமீட்டர் வரையில் அமைந்துள்ளது. கோளவகத்தின் விட்டம் 6944 கிலோமீட்டர் ஆகும். இங்கு 5000-6000 செல்ஸியஸ் வரை வெப்பநிலை காணப்படுகின்றது. கோளவகத்தின் அடர்த்தி 15g/cm3 ஆகும். கோளவகம் 2 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.

வெளிக்கோளவகம் (Outer core) மற்றும் உட் கோளவகம் (Inner core)

புவிமேற்பரப்பில் இருந்து 2900-5150 கிலோமீட்டர் வரையான பகுதி வெளிக்கோளவகம் ஆகும். இங்கு திரவ நிலையில் இரும்பு, நிக்கல், சல்பர், ஓட்சிசன் போன்ற மூலகங்கள் காணப்படுகின்றன.இப்பகுதியின் அடர்த்தி 10-12.5 கனசென்ரிமீட்டர் ஆகவும், 4500-5500 செல்ஸியஸ் வெப்பநிலையும் உண்டு.
வெளிக்கோளவகத்தின் எல்லையில் இருந்து குறிப்பாக 5150-6378 கிலோமீட்டர் வரையிலான பகுதி உட்கோளவகம் எனப்படுகின்றது. இது கடினமான பாகு நிலையில் காணப்படுவதுடன் இரும்பு, நிக்கல், சல்பர், காபன், ஓட்சிசன் , பொட்டாசியம், சிலிகான் போன்ற மூலகங்களை கொண்டுள்ளது.இது 5200-6000 செல்ஸியஸ் வெப்பநிலையை கொண்டுள்ளது.

kidhours-tamilgeography
tamil,tamil to english,how tall is peppa pig,how tall is kevin hart,how tall is ariana grande
,how tall is mount everest,how tall is the eiffel tower,how tall is kendall jenner,tamil nadu
,tamil news,how tall is levi,tamil movies,tamil translation,tamil language,tamil songs
,tamil rockers.com,tamil calendar,tamilwin,tamil movie download,tamil typing
,tamil new movies,tamil new year 2020,tamil actress,tamil movies 2020,tamil alphabet
,tamil rockers isaimini,tamil new year,tamil comedy movies,tamil google translate
,tamil letters, tamilgeopgraphy in tamil, grand 5 Tamilgeography
tamil,tamil to english,tamilrockers,tamil rockers.com,tamil movies,tamil movies download,tamil news,tamil songs,Tamilgeography notes
tamil translation,tamil actress,tamilwin,tamil win,tamil to sinhala,tamilgeopgraphy

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.