Tamil World General Knowledge உலக காலநிலை செய்திகள்
1.உலகின் மிகச்சிறிய நாடான வாடிகன் நகரம், இரவு நேரத்தில் தன் வாயிலை மூடிக்கொள்கிறது. 108.7 ஏக்கர் பரப்புள்ள வாடி கனுக்கு என்றே தொலைபேசி, ரேடியோ, டி.வி. நிலையங்கள் கரன்சி மற்றும் தபால் தலைகள் உண்டு!
2.122 குட்டித் தீவுகளால் உருவான வெனிஸ் நகரத்தில் 400 பாலங்கள் உள்ளன.
3.ரோம் நகரின் சட்டப்படி பூனையைக் கொல்பவருக்கு 10 ஆயிரம் யூரோ அபராதமும் 3 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் உண்டு.
4.இத்தாலிய மொழியில் ஒய் (y) எழுத்து இல்லை.இத்தாலியில் 3 ஆயிரத் துக்கும் அதிகமான அருங் காட்சியகங்கள் உள்ளன.
5.இத்தாலியையும், சுவிட்சர் லாந்தையும் இணைக்கிறது 35 கிலோமீட்டர் நீளமுள்ள ரெயில் சுரங்கப்பாதை. ‘லாட்ஷ்பெர்க் பேஸ்’ என்ற இப்பாதையே உலகின் மிக நீளமான நிலச் சுரங்கம்.
6.ஐரோப்பாவின் உயிருள்ள 3 எரிமலைகளுமே இத்தாலி யின் தென்பகுதியில்தான்
உள்ளன.
7.உலகின் மிகப்பழமையான வெனிஸ் திரைப்பட விழா 1932-ல் தொடங்கியது.
ஐரோப்பாவிலுள்ள மற்ற நாடு களை விட இத்தாலியில்தான் ஓட் டல் அறைகள் அதிகம். இங்கு ஆண்டுக்கு 4 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.
Kidhours – Tamil World General Knowledge, Tamil World General Knowledge information
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.