US Cyclone Affected உலக காலநிலை செய்திகள்
அமெரிக்காவின் மத்திய பகுதியில் சக்தி வாய்ந்த சூறாவளி நேற்று தாக்கியதில், பல்வேறு பகுதிகளிலும் இருந்த வீடுகள் சேதமடைந்ததுடன் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
இதுபற்றி புலாஸ்கி கவுன்டி பகுதியை சேர்ந்த பிரதிநிதி மேடலின் ராபர்ட்ஸ் என்பவர் சி.என்.என். செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்,
நேற்று மதியம் கடுமையாக தாக்கிய சூறாவளியால், அர்கான்சாஸ் மாகாணத்தின் நார்த் லிட்டில் ராக் பகுதியில் முதல் நபர் பலியானார். அந்த பகுதியில் 50 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

பலர் பாதிப்படைத்து இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது என கூறியுள்ளார். இதுதவிர, செயின்ட் பிரான்சிஸ் கவுன்டியில் வைன்னே நகரில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.
உக்ரைன் சூளுரை 74 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்றிரவு மின்சார வசதி இன்றி பாதிக்கப்பட்டு உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.
அமெரிக்காவின் மிஸ்ஸிசிப்பி நகரில் வலிமையான சூறாவளி தாக்கியதில் 26 பேர் உயிரிழந்த ஒரு வாரத்தில் மற்றொரு சூறாவளி தாக்குதல் ஏற்பட்டு உள்ள நிலையில் இதன் பாதிப்புகள் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Kidhours – US Cyclone Affected
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
YouTube Channel ” kidhours