Tamil Ukraine news சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உக்ரைனில் உள்ள ஜபோரிஷியா அணுமின் நிலையம் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமாகும்.
அதை ரஷ்யா நேற்று தாக்கி ஆக்கிரமித்தது. இந்த தாக்குதலில் ஆலையில் இருந்த கட்டிடம் எரிந்து நாசமானது. 3 பேர் பலியான சம்பவம் உலகையே உலுக்கியது. இது கதிர்வீச்சால் பேரழிவை ஏற்படுத்தும் என்ற அச்சமும் உள்ளது. அதிர்ஷ்டவசமாக, இதற்கு முன்பு அப்படி எதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில், உக்ரைனில் உள்ள ஐந்து முக்கிய அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை பிரான்ஸ் முன்மொழியும் என்று அதன் அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் அலுவலகம் நேற்று தெரிவித்தது.பாதுகாப்புத் திட்டம் சர்வதேச அணுசக்தி முகமை தரநிலைகளின் அடிப்படையில் இருக்கும்.
![அணுமின் நிலையங்களை காக்க உதவும் பிரான்ஸ் Tamil Ukraine News 1 Tamil Ukraine news](https://www.kidhours.com/wp-content/uploads/2022/03/Nuclear-power-plants-ukraine.jpg)
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் விளைவாக அணுசக்தி பாதுகாப்பு மற்றும் சர்வதேச பாதுகாப்பை அமல்படுத்துவதில் உள்ள அபாயங்கள் குறித்து மக்ரோன் கவலைப்பட்டார் என்று பிரெஞ்சு ஜனாதிபதி அலுவலகத்தின் அறிக்கை கூறுகிறது.
kidhours – Tamil Ukraine news
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.