Food Ball World Cup 2022 பொது அறிவு செய்திகள்
உலக கோப்பை கால்பந்து திருவிழா அரபு நாடான கத்தாரில் வருகிற 20-ஆம் திகதி தொடங்க உள்ளது.
உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டில் ரஷ்யாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் மகுடம் சூடியது.
இந்த நிலையில் 22-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா அரபு நாடான கத்தாரில் வருகிற 20-ஆம் திகதி தொடங்கி அடுத்த மாதம் 18-ஆம் திகதி வரை நடக்கிறது.
இதில் 5 முறை சாம்பியனான பிரேசில், நடப்பு சாம்பியன் பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, நெதர்லாந்து, அர்ஜென்டினா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, டென்மார்க், போர்ச்சுகல், உருகுவே, பெல்ஜியம் உள்பட 32 அணிகள் களம் இறங்குகின்றன.
அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் 16 அணிகள் நாக்-அவுட் என்ற 2-வது சுற்றுக்குள் நுழையும்.
போட்டிகள் இந்திய நேரப்படி மாலை 3.30 மணி, 6.30 மணி, இரவு 9.30 மணி, நள்ளிரவு 12.30 மணி ஆகிய நேரங்களில் நடக்கிறது.
20-ஆம் திகதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் கத்தார், ஈகுவடாரை (இரவு 9.30 மணி) சந்திக்கிறது.
Kidhours – Food Ball World Cup 2022
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.