Thursday, October 31, 2024
Homeகல்விதமிழ்தமிழ் மொழியின் சிறப்பு கட்டுரை specialty of Tamil language

தமிழ் மொழியின் சிறப்பு கட்டுரை specialty of Tamil language

- Advertisement -

specialty of Tamil language தமிழ் மொழியின் சிறப்பு கட்டுரை

- Advertisement -

உலகமொழிகள் ஏறத்தாழ மூவாயிரம் (2795) என தமிழ் வரலாறு எனும் நூலில் மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் குறிப்பிட்டுள்ளார். அவற்றுள் இயல்பாகத் தோன்றிய இயன்மொழியான நம் தமிழ் மொழிக்குப் பதினாறு பண்புகள் உள்ளன. நம் தமிழ் மொழி பல்வகைச் சிறப்புகளை ஒருங்கேயுடையது என்கிறார் பாவாணர்.

உலக மொழிகள் பலவற்றுக்கு எழுத்து, சொல், யாப்பு, அணி ஆகியன உண்டு ஆனால் தமிழ் மொழிக்கு மட்டும்தான் பொருளுக்கு இலக்கணம் உண்டு. ஆகையால்தான் தமிழை ஐந்திலக்கணம் என்றனர். பொருளிலக்கணம் பிறந்த முறையினை ‘இறையனார் அகப்பொருள்’ எனும் நூல் வழி அறியலாம்

- Advertisement -

நம் எண்ணங்களை பிறருக்கு தெரிவிக்கவும் ,பிறருடைய உணர்வுகளை நாம் புரிந்து கொள்ளவும் உதவுவது மொழியேயாகும்.

- Advertisement -

நாகரிகம் வளர வளர பேச்சி வழக்கு மொழியெல்லாம் எழுத்து வடிவம் பெற்றன.காலத்தால் பழமையான, ஆதிகால மனிதனின் அற்புத மொழியாக தமிழ் மொழி திகழ்கிறது. தமிழின் சிறப்புகளை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

specialty of Tamil language கட்டுரை  
specialty of Tamil language கட்டுரை

காலம் பல மாறினாலும் கண்டம் பல அழிந்தாலும் அழியாத சிறப்புடைய மொழியாக தமிழ் மொழி திகழ்கிறது.இயல், இசை, நாடகம், எனும் முத்தமிழாய் வளந்து.கன்னிதமிழாய் , செந்தமிழாய்,வண்டமிழாய்
பைந்தமிழாய்,வளம் வரும் ஒரே மொழி தமிழ் மொழியாகும்.

எண்ணற்ற புலவர்களாலும் ,அரசர்களாலும் சங்கம் வைத்து தடத்த பட்ட ஒரே மொழி தமிழ் மொழியாகும்.

செம்மொழியாய் தமிழ் சிறப்புற்று விளங்குவது தமிழர்கள் செய்த பெரும் பேராகும். தமிழின் தொன்மை ,பிறமொழி தக்கமின்மை, தாய்மை
இலக்கிய வளமை,இலக்கண செழுமை ,நடுவுநிலமை,உயர்ந்த விழுமிய
சிந்தனைகள்,கலை இலக்கியத்தன்மை, மொழிக்கோட்பாட்டுத் தன்மை
செம்மொழிக்குரிய பண்புகள் மொழியளர் கூறுகின்றனர்.

உலக இலக்கியங்காலில் முதன்மை பெற்றவை சங்க இலக்கியங்கள்
பத்துப்பாட்டு,எட்டுத்தொகை பதினொன்கிழ்கணக்கு நூல்கள் இன்றலவும் தமிழ்மொழியின் இலக்கிய வளத்திற்கு இன்பம் சேர்கின்றன.

தமிழ்மொழியில் உள்ள இலக்கியங்களைப் போல வழமையான,செழுமையான இலக்கியங்கள் உலகிலுள்ள வேறெந்த மொழியிலும் இல்லை எனசெட்டு மொழியில் பேரறிஞர் கமில்சுவலபில் கூறினார்.ஒரு மொழியின் இலக்கியங்களை வைத்துத்
தான் அம்மொழியில் செழுமையை அறியமுடியும்.

ஒரு மொழியின் இலக்கண வளமே பற்பல இலக்கியங்கள் படைக்க
முன்னோடியாக திகழ்வதற்கு வழிவகுக்கும். தமிழ் மொழியின் தொன்மையான இலக்கண நூல் தொல்காப்பியமாகும்.

எழுத்து, சொல், பொருள் ,ஆகிய மூன்றானுக்கும் தொல்காப்பியம் இலக்கணம் கூறுகிறது. தொல்காப்பியரின் ஆசிரியராணா அகத்தியரின் அகத்தியம்
ஐ ந்திலக்கனங்களின் அருமையை எடுத்துரைக்கிறது .

நன்னுள் தண்டியலங்காரம் சதுரங்காதி போன்ற இலக்கண நூல்கள் தமிழ்மொழிக்கு அணிகலன்கலாய் அழகு சேர்கின்றன.

மக்களின் அன்றாட நிகழ்வுகளை வெளிப்படுத்தும்காலகண்ணாடிகளாய் இலக்கியங்கள் திகழ்கின்றன யாதும் ஊரே யாவரம்கேளிர்,பிறபோகும் எல்ல உயிருக்கும் ,

தீதும் நன்றும் பிறர் தர வாரா, உண்டாம் இவ்வுலகம் சுழன்று ஏர்பின்னது உலகம் போன்ற இலக்கிய உலகில் அடிகள் இன்றும் வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கங்களாய் திகழ்கின்றன .

ஒவ்வொரு இலக்கியமும் ஒவ்வொரு இலக்கை குறிக்கோளை மக்களிடையே விதைத்து பண்பட்ட மனிதர்கலாய் வாழ வழிவகுத்தது .

தமிழ் தனித்தியங்கும் வலிமையுடையது காலத்தால் அழியாத கன்னி தமிழாய் இளமையுடன் திகழக்கூடியது .பிறமொழி கழிப்பில்லாமல் வளர்ந்தோங்கும் செழுமையுடைய மொழி தமிழ் மொழியாகும் .

இத்தகைய வளமை பொருந்திய தமிழ்மொழிக்கு இன்னும் பல இலக்கிய அணிகலன்களை சூட்டி அழகு சேர்ப்போம்.

 

Kidhours – specialty of Tamil language , specialty of Tamil language in the world , specialty of Tamil language history

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.