Tamil Short Essay Hill Country மலைநாடு கட்டுரை
இயற்கை வழங்கும் அழகுக் காட்சிகளில் மலையும் ஒன்று. மலையையும் மலைசார்ந்த இடத்தையும் பண்டைத் தமிழர் ‘குறிஞ்சி’ என்று அழைத்தனர். குறிஞ்சி நிலத்தின் கடவுளாக முருகனைப் படைத்தனர். தமிழில் முருகு என்றால் அழகு என்று பொருள். அழகையே, இயற்கை அழகையே இறைவனாக வழிபாடு செய்யும் வழக்கம் தமிழர்களிடையே பண்பாடாக வளர்ந்து இருந்தது.
மலைப்பகுதியின் அழகு காரணமாக, அதன் தெய்வமாக முருகன் அல்லது ‘அழகனை’த் தமிழர் வழிபட்டதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே ! இயற்கை அழகின் தளமாக அமைந்திருக்கும் மலையைப் பற்றியும் மலைதரும் அழகுக் காட்சியைப் பற்றியும் பல புலவர்கள் பாடியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு மாறுபட்ட நிலையில், பாரதிதாசன் மலை தரும் வனப்பைப் பற்றிப் பாடியுள்ளார்.

அழகு மிகுந்த நுவரெலியா – ஹவாஎலிய பொரலந்த ஆகிய பிரதேசங்களுக்கிடைப்பட்ட பிதுருதலாகலை வனப்பகுதியில் அமைந்துள்ள லவர்ஸ்லீப் நீர்வீழ்ச்சி சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரக்கூடியது இந்த நீர்வீழ்ச்சி பழமையான நீர்வீழ்ச்சி என்பதால் சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வருகை தருவது அதிகமாக காணப்படுகின்றது.
தற்போது நிலவும் மிதமான காலநிலை காரணமாக அதிகளவிலான சுற்றுலாப்பயணிகள் இப்பகுதிக்கு வருகை தருகின்றார்கள்.அம்பேவெல கால்நடை பண்ணை, ஹய்லன்ட் பால் தொழிற்சாலை, ஹோர்டன் பிளேன்ஸ், சந்ததென்ன சிறிய உலக முடிவு, விக்டோரிய பூங்கா, ஹக்கல தாவரவியல் பூங்கா, லவர்ஸ்லீப் நீர்வீழ்ச்சி, பிதுருதலாகலை மலை, பீட்று தேயிலை தொழிற்சாலை உள்ளிட்டவை சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பி பார்வையிடும் இடங்களாகும்.
பெரும்பான்மையான சுற்றுலா பயணிகள் உலக முடிவை கண்டுகளிப்பதற்கு அதிகாலை வேலைகளில் செல்வது வழக்கம்.
நாட்டிற்கு தற்போது வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. எனினும் மலையக பகுதியின் எழில் கொஞ்சும் அழகோ தனி அழகு.
kidhours – Tamil Short Essay Hill Country
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.