கட்டுரை ” உழைப்பே உயர்வு தரும் ” Tamil Short Essay Hard Work
“தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்” என்கின்றார் வள்ளுவர்.
அதாவது முன்வினையால் ஒரு காரியம் நடைபெறாமல் போனாலும் தனது உடலை வருத்தி உழைக்கும் போது அதற்கான பலன் கிடைக்கும் என்பதே இதன் பொருள் ஆகும்.
நாம் முயற்சியுடன் உழைக்கும் போது வெற்றி நமக்கு கிடைத்தே தீரும்.
வள்ளுவர் மட்டுமல்லாது ஒளவையார், விவேகானந்தர் போன்ற பலரும் உழைப்பை பற்றி கூறியுள்ளனர்.
இந்த கட்டுரையில் உழைப்பே உயர்வு தரும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
கடின உழைப்பே உயவுக்கு சிறந்த வழியாகும் .உழைப்பில்லாமல் வெற்றி என்பது வெறும் கனவாகும்.நல்ல சந்தர்பத்திற்க்காக காத்திருக்கும் ஒருவனால் எப்போதும் வெற்றி பெற இயலாது .
உழைப்பில்லாமல் எந்த ஒரு நல்ல நிகழ்வுகளும் ஒருவரது வாழ்வில் நடைபெறாது.
தாமஸ் ஆல்வா எடிசன் 21 மணிநேரம் உழைக்கும் வல்லமை உடையவர் , தனுக்கு கிடைக்கும் இரண்டு மூன்று மணி துளிகளையும் தனது ஆய்வகத்திலேயே உறங்கினர்.
இந்த உழைப்பினாலேயே ஒரு சிறந்த அறிவியலாளராக இந்த உலகிற்கு புதிய கண்டுபிடுப்புகளை கொடுக்க முடிந்தது .
நமது தேச தலைவர்களான காந்தி மற்றும் நேரு போன்றோர் 17 மணி நேரத்திற்கும் அதிகமாக உழைக்கும் பழக்கம் உடையவர்கள் .இந்திய சுதந்திரத்திற்கு இந்த உழைப்பே உறுதுணையாக இருந்தது.
எப்போதும் வேலைசெய்ய தயாராகு இருக்கும் மனநிலையில் உள்ள ஒரு மனிதனை வெற்றி தேடி வருகிறது .வேலை என்பதை ஒரு பளுவாக என்னமாய் அதை ஒரு மகிழ்ச்சியான செயலாக மேற்கொள்ளும் மனோபாவத்தை வளர்த்து கொள்ள வேண்டும்.
நாளை என்பது இன்றே வேலைகளை செய்பவருக்கு மகிழ்ச்சியான நாளாகும் .ஒரு மனிதன் தனக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் வேலையாக இல்லாத பொது அதை செய்து முடித்து விட்டால்,தனக்கு பிடித்த வேலைகள் செய்ய நல்ல மனநிலை ஏற்படுகிறது .
கடின உழைப்பை தொடுவதற்கு இந்த வழிமுறையே வாய்ப்பாகும்.
நூறு பேரை விட சிறந்தவராக விளங்க வேண்டுமென நீங்கள் நினைத்தால் ஏனைய தொண்ணூற்றொன்பது பேரை விட நீங்கள் கடினமாக உழைத்தாக வேண்டும்.
உழைப்பில்லா பிறப்பு இறப்பிற்கு சமம் என்று குறிப்பிடுகின்றார்கள். மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் சோம்பல்தனத்தை கைவிட்டு கடினமாக உழைத்தால் மட்டுமே வையகத்தில் வாழ்வாங்கு வாழ முடியும்.
கடின உழைப்பு ஒருவரை சிறப்பான பாதைக்கே இட்டு செல்லும். எனவே கடின உழைப்பை மூலதனமாக இட்டு வாழ்வின் உயர்ந்த இடத்தை அடைவோம்.
kidhours – Tamil Short Essay Hard Work
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.