Tamil Short Essay Fuel சிறுவர் கட்டுரை
எரிபொருள் சிக்கனம்
ஒவ்வொருவருடைய மனிதர் வாழ்க்கையிலும் மின்சாரம், சமையல் எரிவாயு, எரிபொருள் போன்ற நீர் சம்பந்த ஆதாரத்தினை கொண்டே வாழ்க்கை நகர்ந்துக்கொண்டு இருக்கிறது. 24 மணி நேரமும் மனிதருக்கு எரிபொருளின் அவசியம் தேவைப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. எரிபொருள் தயாரிப்பு நிலையை விட அதிகளவு பயன்பாட்டில் உள்ளது. இதனால் உலகில் அதிகமாக மாசடைந்து சுற்றுசூழல் பாதிப்படைகிறது. ஆண்டுதோறும் எரிபொருள் சிக்கனம் தேதியாக டிசம்பர் 14-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் பெட்ரோல் டீசல் விலை பொருட்களின் உயர்வை கட்டுப்படுத்த எரிபொருள் சிக்கனம் என்பது மிகவும் முக்கியான ஒன்று. நாட்டில் கிடைக்கக்கூடிய எரிபொருள் வகைகளான டீசல், பெட்ரோல் மற்றும் நிலக்கரியின் அளவானது இப்போது மிகவும் குறைந்துக்கொண்டே போகிறது. எரிபொருள்களை நாம் அதிகளவு உபயோகிக்கும் போது சுற்றுசூழலுக்கு மாசு அடைந்து நமக்கும் கேடு விளைவிக்கிறது.
எரிபொருளை சேகரிக்க மிதிவண்டி ஒட்டி பழகிக்கலாம். சைக்கிள் ஓட்டுவது மாசு கட்டுப்பாட்டிற்கு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கக்கூடியவை. இந்த பதிவில் எரிபொருள் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வு கட்டுரையை படித்து பயன் பெறுவோம். பொருளடக்கம்:
நமது நாட்டில் பல போர்கள் நடந்துள்ளன. அடுத்து உலகப்போர் என்று ஒன்று வந்தால் அது நீருக்குத்தான் மக்களே..அப்படி என்ன போராட்டம் என்று கேட்கிறீர்களா? அது பெட்ரோல், டீசல், நிலக்கரி தட்டுப்பாட்டினால் ஏற்படும் போராட்டமாகத்தான் இருக்கும். மனிதருடைய வாழ்க்கையில் எரிபொருளானது மிகவும் முக்கியமான அங்கமாக மாறிவிட்டது.
எனவே எரிபொருளை அதிகமாக உபயோகிப்பதை தவிர்த்து சிக்கனமாக செலவழிக்க வேண்டும். எரிபொருள் சிக்கனத்தை பயன்பாடுகள்: எரிபொருள் சிக்கனத்தை கடைப்பிடிக்கும் வகையில் குறைவான அளவே மின் சக்தியில் எரியும் மின் விளக்குகள், சூரிய ஒளியில் எரியும் விளக்குகள் போன்றவற்றை பயன்படுத்தி வந்தால் எரிபொருள் சிக்கனத்திற்கு வழிவகுக்கும்.
நாம் சுவாசிக்கும் காற்றினில் அதிகளவு மாசடைவதற்கு முக்கிய காரணம் அதிகமாக எரிபொருள் பயன்படுத்துவதே. காரணம் நாம் சேமித்து வைத்துள்ள எரிசக்தி புதிய எரிசக்தியை உற்பத்தி செய்வதற்குச் சமம். நாம் மின்சாரத்தில் 1 யூனிட் அளவு சேமித்தால் 2 யூனிட் அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். எரிபொருளானது அதிகளவு வெளியாகுவதற்கு முக்கிய காரணம் போக்குவரத்து நெரிசலும் கூட சொல்லலாம். நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசலானது அதிகரித்து கொண்டேதான் போகிறது.
அதனால் எரிபொருளை சேமிக்க போக்குவரத்து நெரிசலை குறைத்துக்கொள்ள முயற்சி எடுக்க வேண்டும்.
மின்சார ரயிலிலும், சாதாரணமான ரயிலிலும் அதிகமாக மின்சாரம் வீணாகிறது. இது போன்ற தவறினை நாம் குறைத்துக்கொள்ள வேண்டும். எரிபொருளை நாம் சேகரித்தால் எதிர்கால சந்ததிகளுக்கு மிகவும் பயன்படும். வாகன ஓட்டிகள் அனைவருமே எரிபொருள் சிக்கனத்தை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும்.
வாகனங்களில் எரிபொருளை மிச்சப்படுத்துவதற்கான வழிமுறைகள்
* நினைத்த நேரத்தில், நினைத்த இடத்திற்கு செல்வதற்கும், குறுகலான சந்துகளில் செல்வதற்கும், பேருந்துகளுக்கு கால் கடுக்க நிற்க வேண்டியதில்லை எனவும் இரு சக்கர வாகனம் வைத்திருப்பதற்கான காரணங்கள் ஏராளமாக இருக்கிறது.
* ஆனால், இரு மாதங்களுக்கு ஒரு முறை பெட்ரோல் விலை ஏறி வருவதை நினைக்கும் போது, பைக்கை விற்று விடலாமா என்று கூட பலர் யோசிப்பது உண்டு.
* இரு சக்கர வாகனத்தை விற்று விடுவதாலோ, உபயோகிக்காமல் இருப்பதாலோ மேற்கூறிய சவுகரியங்களை நாம் விட்டுக் கொடுக்க நேரிடும். பெட்ரோலை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம் டூ வீலர்களில் நாம் சிட்டாக பறக்கலாம்.
* எரிபொருள் அதிகப்படியாக எரிக்கப்படுவதால் வீணாகும் எரிபொருள் 30 சதவீதம் வரை சேமிக்கப்படுகிறது. சாதாரணமாக 60 கி.மீ ஒரு லிட்டருக்கு கொடுக்கும் வாகனம் ஹைட்ரோ – ஜென் கருவியை பயன்படுத்தும் போது 75 முதல் 80 கி.மீ வரை மைலேஜ் கொடுக்கிறது.
* வெளியேற்றப்படும் புகையின் அளவு 40 சதவீதமாக குறைக்கப்படுவதால் எஞ்சின் ஆயிலின் ஆயுள் 4 மடங்கு அதிகரிக்கிறது.
பெட்ரோல் டீசல் சேமிக்க டிப்ஸ்
1. முதலில், வாகனத்தை, சர்வீஸ் செய்ய வேண்டும். எண்ணெய் கசிவு நீக்க வேண்டும். மைலேஜ் பரிசோதனை செய்ய வேண்டும்.
2.வாகனங்களின் டயர்களில் சரியான காற்றழுத்ததை சீராக பராமரிப்பது மிகவும் அவசியம். அதிகப்படியான காற்று அல்லது குறைவான காற்று போன்ற காரணங்களால் மைலேஜ் கிடைக்காது மற்றும் டயர்களை பாதிக்கும். நிறுவனத்தார் கொடுத்த காற்றழுத்ததை மட்டுமே பராமரிக்க வேண்டும்.
3.புதிய டயர்கள் மாற்றும்பொழுது வாகன தயாரிப்பாளர் பரிந்துரைத்த டயர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
4. சிக்னலில் 30 வினாடிக்கு மேல் நிற்க வேண்டியிருந்தால், வண்டியை அணைத்துவிட வேண்டும்.
5. காலை நேரங்களில் மட்டும் எரிபொருளினை நிரப்ப வேண்டும். எரிபொருளின் ஸ்பெசிபிக் க்ராவிட்டி (specific gravity) காலை நேரங்களில் அதிகமாக இருக்கும்.
6. எரிபொருள் கலனில் எப்பொழுதும் அறை பங்கிற்க்கு மேல் எரிபொருள் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால் எரிபொருள் சரியான அழுத்ததில் செல்ல பெரிதும் உதவுகிறது.
7. வாகனத்தின் பராமரிப்பு மிகவும் அவசியமாகும். சரியான கால இடைவெளியில் பராமரித்தால் தேவையற்ற செலவுகளை தவர்க்கலாம். வாகனத்தின் செயல்திறனும் சிறப்பாக இருக்கும்.
8. எக்காரணம் கொண்டு தயாரிப்பாளர் பரிந்துரைக்காத எரிபொருள், அடிட்டீவஸ் பயன்படுத்தக் கூடாது.
9. வாகனத்தை இயக்கும் பொழுது தேவையான அளவே ஆக்ஸிலேட்ர்களை கொடுக்க வேண்டும். திடீரென அதிகப்படியான ஆக்ஸிலேட்ர் கொடுப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
10. பிரேக் பிடிப்பதில் கவனம் கொள்ளுங்கள் ஆக்ஸிலேட்டர் கொடுத்தவுடன் உடனடியாக பிரேக் பிடிக்கக் கூடாது.
11. சிக்னல்களில் திடீரென வேகம் எடுக்காதீர்கள். சீரான வேகத்தில் வாகனத்தை இயக்க வேண்டும்.
12. தேவைப்படும் நேரங்கள் தவிர மற்ற நேரங்களில், பிரேக் பிடிக்கக் கூடாது. எந்நேரமும், கிளட்ச்சில் கால் / கை வைக்கக் கூடாது.
13 அதிவேகம் மிகுந்த ஆபத்தானவை. அதேபோல எரிபொருளும் அதிகம் தேவைப்படும். டாப் க்யரிலும் மெதுவாக செல்வது எரிபொருளை சேமிக்க உதவும். சராசரியாக 50-60 கிமீ வேகத்தில் பயணிக்க முயல வேண்டும்.
14. க்ளட்ச் மீது க்யர் மாற்றும் பொழுது மட்டுமே காலினை பயன்படுத்த வேண்டும். அடிக்கடி கியர் மாற்றுவதையும் தவிர்த்தால் நன்மை பயக்கும்.
15.டூ வீலர்களையும் சரி, காரையும் சரி மிக அதிக வேகத்தில் ஓட்டக் கூடாது (100 கிமீ மேல்). அது நம் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதோடு, பெட்ரோலையும் உறிஞ்சி விடும்.
16. வாகனத்தை மிக மெதுவாக ஓட்டினாலும் இதே நிலைமைதான். அதனால் மிதமான வேகத்தில் (55 முதல் 60 கிமீ வேகம்) வாகனத்தை ஓட்டுவது நல்லது.
17. அதிக போக்குவரத்து நெரிசல் இருக்கும் போது வண்டி ஓட்டுவதை ஓரளவு தவிர்க்க முயற்சிக்கலாம். சிக்னல்களில் வண்டி என்ஜினை ஆஃப் செய்து விடுவது பெட்ரோலை சேமிக்க பெரிதும் உதவும்.
18. வண்டி ஸ்டார்ட் செய்தவுடனேயே ஆக்சிலேட்டரை முறுக்கி சீறி பாயாமல், படிபடியாக வேகத்தை அதிகரிப்பதால் பெட்ரோல் அனாவசியமாக வீணாவதை தடுக்கலாம்.
19. டயரின் காற்றழுத்தத்தை அடிக்கடி பரிசோதித்து கொள்ள வேண்டும்.
20. திடீரென ஆக்சிலேட்டரை அதிகரிக்கவோ, இறக்கவோ கூடாது.
21. சென்னை போன்ற நகரங்களை பொருத்த வரை, அடிக்கடி போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அத்தகைய மாற்றங்களை நாளிதழ் வாயிலாகவோ, எப்.எம். ரேடியோக்கள் மூலமாகவோ தெரிந்து வைத்திருக்க வேண்டும் .
22. நாம் போகும் இடத்துக்கு தெளிவாக ரூட்டை தெரிந்து வைத்திருப்பதன் மூலம் அனாவசியமாக சுற்றி பெட்ரோல் வீணடிப்பதை தவிர்க்கலாம்.
23. Tank-ல் தேவையான அளவு பெட்ரோலை நிரப்பினால் போதுமானதாகும். அதிகப்படியாக பெட்ரோல் இருந்தால் ஆவியாகி விடும்.
24. இரு சக்கர வாகனங்களை சாய்வாக நிறுத்தக் கூடாது.
25. தொடர்ந்து நிலையான வேகத்தை பயன்படுத்த வேண்டும்.
26. எவ்வளவு முடியுமோ அவ்வளவு, பஸ், ரயில், ஷேர் ஆட்டோ போன்ற பொது வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும். ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான தூரங்களுக்கு, நடந்தே செல்லப் பழகிக்கொள்ள வேண்டும்.
kidhours – Tamil Short Essay Fuel ,Tamil Short Essay Fuel crisis in tamil , Tamil Short Essay Fuel notes , Tamil Short Essay Fuel used
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.