Saturday, September 21, 2024
Homeகல்விகட்டுரை''நாளைய தமிழ்'' கட்டுரை Tamil Short Essay

”நாளைய தமிழ்” கட்டுரை Tamil Short Essay

- Advertisement -

Tamil Short Essay சிறுவர் கட்டுரை

- Advertisement -

பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்திருக்கும் தமிழ்மொழி

பல நூறு மொழிகளில் சிறந்திருக்கும் தமிழ்மொழி. இம்மொழி உலகில் முதலில் தோன்றி இன்று வரை தமிழர்களால் பெருமையாக பேசக்கூடிய ஒரே மொழி நம் தமிழ் மொழி. அக்காலத்தில், கிட்டத்தட்ட அனைவரும் தமிழில் மட்டுமே பேசினர்.

- Advertisement -

ஆனால், இன்று உலகில் 18 விழுக்காடு மக்கள் மட்டுமே தமிழில் பேசுகின்றனர். இந்த நிலமைக்கு நாம் மட்டுமே காரணமாவோம்.

- Advertisement -
Tamil Short Essay சிறுவர் கட்டுரை
Tamil Short Essay சிறுவர் கட்டுரை

 

இக்காலத்தில், மக்கள் தம்முடைய தாய்மொழியான தமிழ் தெரிந்தும் பிள்ளைகளிடமும், குடும்ப உறுப்பினர்களிடமும், நண்பர்களிடமும், ஆங்கிலத்திலையே பெரும்பாலும் பேசுகின்றனரேயேயொழிய தமிழில் அல்ல.

நான் தமிழன் என்று பெருமையாக கூறிய காலம் போய் இன்று சிலர் தமிழனாக பிறந்ததை எண்ணி வருந்துகின்றனர். இதற்கு காரணம் நமக்கு தமிழைப் பற்றி சரியாக தெரியாததே ஆகும்.

தமிழில் மட்டுமே எண்ணிக்கை இல்லாத குறள்களும், பழமொழிகளும், மூதுரைகளும், வார்த்தைகளும், பாடல்களும், படங்களும் இருக்கின்றன.

நம்முடைய பிறப்பிலும், மூச்சிலும், அடையாளத்திலும் இருக்கும் மொழி தமிழ் மொழி மட்டுமே. அதை வாழவைப்பது நமது கைகளில் மட்டுமே இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

தமிழை நாம் எழுத்தின் மூலம் வளர்க்கலாம். சீரிளமை திறம் வியந்து செயல்மறந்து மொழியாக சுவையாக அமுதமாக தாயாக உயிராக தெய்வமாக தமிழ் போற்றப்படுகிறது.

இத்தமிழை நாம் கவிதைகளாலும் கதைகளாலும் அக்காலத்திலிருந்து எழுதியும் மேம்படுத்தியும் வருகிறோம். இதை நாம் நிறுத்தாமல் செய்தால் மட்டுமே, நம்மால் தமிழின் ஆழத்தையும் அதன் அருமை பெருமைகளையும் அறிந்துகொள்ள முடியும்.

இதை அடிப்படையாகக்கொண்டு சிங்கப்பூரில் பள்ளிகளில் தமிழை மேம்படுத்தவும், அதன் அருமையை மாணவர்களுக்குக் கொண்டு செல்லவும், வரலாற்றில் இடம்பெற்ற அம்மொழியை வளர்க்கவும், தமிழில் திறமையாக எழுதவும், படிக்கவும், அதை பற்றி சிந்திக்கவும் சிறுவயதிலிருந்து கற்கின்றனர்.

இதை நாம் மறவாமல் பின்பற்றினால், தமிழின் பெருமை உலகெங்கும் பரவும். இதற்கு சிங்கப்பூரில் தமிழை ஒரு முக்கிய மொழியாக படிக்கும் நாம் முதலில் ஓர் அடி எடுக்கவேண்டும்.

இக்காலத்தில், அனைவருக்கும் விருப்பமான பொழுதுபோக்காக கருதப்படுவது பாடல் மற்றும் படம் ஆகும். இதைத் தமிழில் இயக்கம் செய்வது தமிழரிடையே தமிழின் பெருமையையும் வளர்ச்சியையும் கொண்டு செல்கிறது.

இவை மனப்பாடம் செய்ய சுலபமாக இருப்பதால், தமிழை ஆழமாக அறியவும் அதன் பெருமைகளை எடுத்துரைக்கவும் உதவுகிறது. அதனால், மக்களுக்குத் தமிழின் மீது பற்று ஏற்படுகிறது.

இதனால் தமிழ் வளர அதிக வாய்ப்புண்டு. இதை நினைவுட்ட சிங்கப்பூரில் தமிழ் மாதத்தின்போது அதைக் கொண்டாட தமிழில் பல போட்டிகள் நடத்தப்படுகின்றன.

முக்கியமாக தமிழைக் காக்க நாம் நம்முடைய தமிழர் பண்பாடுகளையும் வழிப்பாட்டுகளையும் கடைப்பிடிக்க வேண்டும். அவை நம் தமிழின் பெருமையை நமக்கு உணர்த்தும்.

இந்த முறைகள், நமக்கு பிறகு தமிழை அடையாளமாக கெள்ளப்போகிற அனைத்து மக்களுக்கும் தமிழின் பெருமையையும் அருமையையும் அறிந்து, அதன் மேல் பற்றுக்கொண்டு அதை வளர்க்க உதவும்.

நம்முடைய தாய்மொழியை வளர்க்க வயதோ பணமோ தேவையில்லை. மனம் இருந்தால் போதும். நம்முடைய ஐந்து உணர்ச்சிகளை நாம் சரியான முறையில் பயன்படுத்தினாலேயே, நமக்குத் தமிழைப் பற்றி எவ்வளவோ புதிய விபரங்கள் தெரியவரும்.

இது தமிழை நேசிக்க உதவும். ‘பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்’, என்று கூறினார் பாரதியார்.

இதைப் பின்பற்றி தமிழர்களாகிய நாம் ஒன்றிணைந்து, நம்முடைய முன்னோர்களைப் போல் தமிழை மேம்படுத்தி அதன் அருமை பெருமைகளை நமக்குப் பிறகு இந்த உலகில் தமிழர்களாய் கால் வைக்கும் அனைவருக்கும் கொண்டு சேர்ப்போம். தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம்!

 

Kidhours – Tamil Short Essay , Tamil Short Essay Update ,Tamil Short Essay Nalaya tamil

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.