Christian Pilgrimage Festival சிறுவர்களுக்கான உலக செய்திகள்
நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகம் முன்னெடுக்கும் மருதமடு அன்னை குடியிருக்கும் பெனு அன்னை புனித நீர் ஊற்றை நோக்கிய தமிழர் திருயாத்திரை பெருவிழா ஆரம்பமாகவுள்ளது.
காலை குணமாக்கும் வழிபாட்டினையும் மாலை சிறப்பு பெருவிழா திருநாளையும் சிறப்பாக யாழ்மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் வழிநடத்தவுள்ளார்.
சிறப்பு நிகழ்வுகளாக (10.05.2024) அன்று மாலை 18.30 மணிக்கு அன்னை காட்சி கொடுத்த சிற்றாலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் மாலை 20.00 மணிக்கு நீர் ஊற்றை நோக்கிய மெழுகுதிரி பவனி நடைபெறவுள்ளது.

அதனைதொடர்ந்து சனிக்கிழமை 11.05.2024 அன்று மதியம் 12.30 மணி அன்னையின் திருச்சொரூப் பவனியும் அன்னையின் நீர் ஊற்றில் இறுதி ஆசியும் மதியம் 13.00 மணிக்கு மருதமடு அன்னை திருச்சொரூபத்தின் முன் பிராத்தனை மதியம் 16.00 மணி சிறப்பு திருநாள் பெருவிழா திருப்பலி இடம்பெறவுள்ளது.
Kidhours – Christian Pilgrimage Festival
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.