Tamil Pet Health Issues சிறுவர் சுகாதாரம்
பூனைகளால் வேகமாக பரவி வரும் புதிய ஒட்டுண்ணியால் பார்வையிழக்கும் அபாயம் ஏற்படுவதாக கூறப்படுகின்றது.
மனிதர்களில் இந்த வகை ஒட்டுண்ணியானது கண்களின் பின்னால் தழும்பு ஏற்படுத்த கூடியது. உலகில் அதிக அளவில் பரவியுள்ள ஒட்டுண்ணி வகையாக டாக்சோபிளாஸ்மா கோண்டி உள்ளதாக கூறப்படுகின்றது. உலகத்தில் அனைத்து கண்டங்களிலும் பரவியுள்ள இந்த வகை ஒட்டுண்ணிகள் எல்லா பாலூட்டிகளிலும், பறவைகள் மற்றும் மனிதர்களிலும் தொற்றும் தன்மை கொண்டது.

நபர் ஒருவருக்கு ஒரு முறை ஒரு நபருக்கு தொற்று ஏற்பட்டு விட்டால், பின்னர் வாழ்நாள் முழுவதும் டாக்சோபிளாஸ்மா ஒட்டுண்ணியை அந்த நபர் சுமந்திடுவார்.
நம்முடைய உடலில் இருந்து இந்த ஒட்டுண்ணியை அழிப்பதற்கான மருந்து இதுவரை நம்மிடம் இல்லை. மனிதர்களில் பயன்படுத்துவதற்கான ஒப்புதல் பெறப்பட்ட தடுப்பூசி என எதுவும் இல்லை.
உலகம் முழுவதும் இந்த ஒட்டுண்ணியானது 30–50 சதவீத மக்களிடம் தொற்றியுள்ளது என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. ஒட்டுண்ணியால் ஏற்பட கூடிய வியாதி மனிதர்களின் கண்களின் பின்புறம் தழும்பு ஏற்படுத்த கூடியது.
இந்த வியாதியின் அடையாளங்கள் பற்றி அறிவதற்காக சுகாதாரமிக்க நபர்களிடம் நடத்தப்பட்ட புதிய ஆராய்ச்சியில், பலரிடம் டாக்சோபிளாஸ்மா விட்டு சென்ற அடையாளம் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.
அதோடு இந்த ஒட்டுண்ணி பரவுவதற்கு முக்கிய காரணியாக பூனைகள் காணப்படுகின்றன. தொற்று பாதித்த இரையை பூனை சாப்பிடும்போது, அதன் உடலில் ஒட்டுண்ணி தங்கி விடுகிறதகவும், அதன்பின்னர் 2 வாரங்களில் பூனையின் கழிவு பொருட்களில் அதிக எண்ணிக்கையிலான ஒட்டுண்ணிகள் வெளியேறுகின்றதாகவும் அந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.
kidhours – Tamil Pet Health Issues
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.