World Tallest Tomb சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கால்பந்து உலகின் ஜாம்பவான் ஜாம்பவான் பீலே புற்று நோய் பாதிப்பால் கடந்த 29ஆம் திகதி உயிரிழந்த நிலையில் அவரது உடல் ரசிகர்களின் கண்ணீருக்கு மத்தியில் இன்று , உலகிலேயே மிக உயரமான கல்லறை தோட்டத்தில் பீலேவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அவரது இறப்பு பிரேசிலின் தேசிய துக்கமாக அனுசரிக்கப்பட்டது. பீலேயின் உடல் பிரேசில் நாட்டின் சாவ் பாலோ வைத்தியசாலையில் இருந்து கொண்டு செல்லப்பட்டு சாண்டோஸ் நகரில் உள்ள விலா பெல்மிரோ ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டது.
நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை 10 மணி வரை ரசிகர்கள், பொதுமக்கள் 24 மணி நேரம் பீலேவுக்கு அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்துவதற்காக இலட்சக்கணக்கானோர் பெல் மிரோ ஸ்டேடியத்தில் குவிந்தனர்.
ஒருவர் ஒருவராக கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள். அனைவரும் அஞ்சலி செலுத்திய பிறகு பீலேயின் உடல் அப்பகுதியில் உள்ள வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது.
அஞ்சலி நிகழ்ச்சி முடிந்ததும் 4.4 ஏக்கர் நிலப்பரப்பில், 14 அடுக்கு மாடிகளை கொண்ட நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்தில் பீலேவின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இங்குள்ள பெட்டகத்தில் பதப்படுத்தப்பட்ட அவரது உடல் வைக்கப்படும்.
இதுதான் உலகிலேயே மிக உயரமான கல்லறை தோட்டமாகும். இங்கு நடக்கும் இறுதிச்சடங்கில் அவரது குடும்பத்தினர் தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது என கூறப்படுகின்றது.
Kidhours – World Tallest Tomb
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.