Tamil News USA சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கொரோனா பெருந்தொற்றுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளை அந்தந்த நாட்டு அரசுகள் முனைப்புடன் செயல்படுத்து வருகிறது.
பெரும்பாலான நாடுகளில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இரண்டு டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்ட பின்னர் பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.
அதேசமயம், உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ், கொரோனாவின் புதிய திரிபுகளும் உருவாகி அச்சுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்காவில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆண்டுதோறும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
புதிய கொரோனா வைரஸ் மாறுபாடுகளை எதிர்த்துப் போராடுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட பூஸ்டர் தடுப்பூசிகளை போடுமாறு அமெரிக்க குடிமக்களை வலியுறுத்தியுள்ள ஜோ பைடன் அரசு, ஆண்டுதோறும் கோவிட்19 தடுப்பூசிகளை மக்கள் போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
முதல் முறையாக ஒரு புதிய தடுப்பூசி திட்டம் தொடங்கப்படுகிறது. இது புதிய அணுகுமுறை ஆகும். கொரோனா வைரஸ் தொடர்ந்து மாறி வருவதால், ஆதிக்கம் செலுத்துகிற உருமாறும் வைரஸ்களை இலக்காக கொண்டு, நமது தடுப்பூசிகளை புதுப்பிக்க முடியும்.
பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு ஆண்டுக்கு ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்படும். வருடாந்திர காய்ச்சல் தடுப்பூசியைப் போலவே இந்த தடுப்பூசியை தொழிலாளர் தினத்துக்கும், ஹாலோவீன் மாதமான அக்டோபருக்கும் இடையே அதைப் போட்டுக்கொள்ள வேண்டும்.
இது பாதுகாப்பானது. இதைப் பெறுவது எளிது. இலவசமாக இந்த தடுப்பூசி போடப்படும்.” என்று அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.அமெரிக்க சுகாதார அதிகாரிகள் அண்மையில் ஆலோசனை மேற்கொண்டனர். அதில், புதிய தலைமுறை கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து, 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் இன்னும் தடுப்பூசி போடவில்லை என்றால் தடுப்பூசியை போட்டுக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்தனர். அதன் தொடர்ச்சியாக, இந்த அறிவிப்பை ஜோ பைடன் வெளியிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையின் கோவிட்-19 ஒருங்கிணைப்பாளர் ஆஷிஷ் ஜா கூறுகையில், பெரும்பாலான மக்களுக்கு வருடாந்திர கொரோனா தடுப்பூசி செலுத்துவதன் மூலம் ஆண்டு முழுவதும் கடுமையான நோய்களுக்கு எதிராக அதிக அளவு பாதுகாப்பை வழங்கும் நிலைக்கு அமெரிக்கா நகர்கிறது. இது ஒரு முக்கியமான மைல்கல் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வைரஸின் கூர்மையான மாற்றம், பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளின் இடைவெளியை மாற்றக்கூடும் என்று அமெரிக்காவின் உயர்மட்ட தொற்று நோய் நிபுணர் அந்தோனி ஃபவுசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜான் ஹாப்கின்ஸ் தரவுகளின்படி, அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 94,880,701 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,048,134 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் இதுவரை 606,094,157 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
kidhours – Tamil News USA , Tamil News USA Today
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.