Tamil News Train Fire சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பீகாரில் எக்ஸ்பிரஸ் புகையிரதம் தீ பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் தானாபூரில் இருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் நோக்கி ஒரு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது.
மத்தியபிரதேச மாநிலம் பேடுல் ரெயில் நிலையத்தை நெருங்கியபோது, அந்த ரயிலின் ஒரு பொதுப்பெட்டியில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. உடனே ரெயில் நிறுத்தப்பட்டது.
அந்த பெட்டியில் இருந்து பயணிகள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். அதன் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
kidhours – Tamil News Train Fire
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.