உலகம் முழுக்க கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.நார்வே நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய பிரதமருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். பிரதமருக்கே அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் நார்வே நாட்டில் மட்டுமல்லாமல் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.நார்வே பிரதமர் எர்னா சோல்பர்க் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி தனது 60ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். மலை உச்சியில் இருக்கும் ரிசார்ட்டில் 13 உறவினர்களுடன் அவர் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
![நாட்டின் பிரதமருக்கு கொரோனா விதிகளை மீறியதற்கான அபராதம் #tamil_news#today_tamil#top_tamil 1 tamil_kids](https://www.kidhours.com/wp-content/uploads/2021/04/tamil_kid_news.png)
எனினும், அப்போது 10 பேருக்கு மேல் கூடுதவதற்கு நார்வே நாட்டில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இவ்விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது.இதையடுத்து, பிரதமர் எர்னா சோல்பர்கிற்கு 20,000 க்ரோனா (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1.75 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார் பிரதமர் எர்னா சோல்பர்க். மேலும், அபராதத்தை செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.