New Year Celebration சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உகாண்டாவில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 9 போ் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உகாண்டா தலைநகா் கம்பாலாவில் உள்ள பல்பொருள் அங்காடியில் சனிக்கிழமை (டிச. 31) இரவு புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது வளாகத்துக்கு வெளியே வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது.

இதைப் பாா்ப்பதற்காக ஒரே நேரத்தில் மோலில் இருந்து பொதுமக்கள் வெளியேற முயன்றனா்.
அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 5 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் காயமடைந்த 4 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனா்.
Kidhours – New Year Celebration
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.