ரஷ்யாவின் சைபீரிய கிராமத்தில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளம் நிலப்பரப்பில் உள்ள எல்லாவற்றையும் தனக்குள்ளே இழுத்துக் கொள்வதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
பாதாளத்துக்கான வாசல் என்றும் நரகத்தின் வாசல் என்றும் இதனை வர்ணிக்கின்றனர்.

இந்த பள்ளம் பெரிதாகி வளர்ந்துக் கொண்டே இருப்பதாகவும் கூறப்படுகிறது. நிலத்தின் பெரும் பகுதியை அது உள்வாங்கிக் கொண்டு இருப்பது போன்ற படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.

உறைபனி நிலங்கள் உருகத் தொடங்கியதன் விளைவாக இதுபோன்ற பள்ளங்கள் ஏற்படுவதாகவும் உலக வெப்பமயமாதல் காரணமாக இது போன்ற நரகத்தின் வாசல்கள் மேலும் தோன்றக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்