Tamil News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஜோகர் மாகாணத்தில் 60 அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற படகு திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்விபத்து சம்பவம் மலேசியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஜோகர் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து தெரியவருவதாவது, அகதிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று கடலில் சென்று கொண்டிருந்தது. படகில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 60 பேர் இருந்தனர்.
இந்நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் படகு திடீரென கடலில் கவிழ்ந்ததுள்ளது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் முழ்கியுள்ளனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மலேசிய கடலோர காவல் படையினர் மீட்பு படகுகளில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
விபத்து இடம்பெற்ற இடத்தில் உயிருக்கு பேராடிக்கொண்டு இருந்தவர்களை மீட்க தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் 11 பேர் உயிரிழந்த நிலையிலேயே மீட்பு பணியினர் மீட்டனர். மேலும் நீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 24 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இவ்விபத்து சம்பவத்தில் 25 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் நிலை என்ன என்பது தெரியாத நிலையில் அவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
kidhours – tamil news kids
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.