Tamil News Job For Students சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு 13 மணிநேர பகுதி நேர வேலை வாய்ப்பை வழங்க பல்கலைக்கழக ஆளும் அதிகாரசபை தீர்மானித்துள்ளது.
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தின் கீழ், ஒரு மாணவர் ஒரு மணித்தியால வேலைக்காக 350 ரூபா பெற்றுக்கொள்வார்.
பல்கலைக்கழகத்தில் கல்வி சாரா சேவைகளை வழங்குவதற்கும், இணையம் மூலம் அறிவுப் பரிமாற்றம் செய்வதற்கும் தற்காலிக வேலைவாய்ப்பு நியமனம் வழங்கப்படும் என துணைவேந்தர் தெரிவித்தார்.
பேராதனை பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கம் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தில் மாணவர்களிடையே மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே சுமார் 170 மாணவர்கள் இதற்கு விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களுக்கு ஒக்டோபர் 1ஆம் திகதி நியமனக் கடிதங்கள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு 13 மணிநேர பகுதி நேர வேலை வாய்ப்பை வழங்க பல்கலைக்கழக ஆளும் அதிகாரசபை தீர்மானித்துள்ளது.
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தின் கீழ், ஒரு மாணவர் ஒரு மணித்தியால வேலைக்காக 350 ரூபா பெற்றுக்கொள்வார்.
பல்கலைக்கழகத்தில் கல்வி சாரா சேவைகளை வழங்குவதற்கும், இணையம் மூலம் அறிவுப் பரிமாற்றம் செய்வதற்கும் தற்காலிக வேலைவாய்ப்பு நியமனம் வழங்கப்படும் என துணைவேந்தர் தெரிவித்தார்.
பேராதனை பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கம் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தில் மாணவர்களிடையே மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே சுமார் 170 மாணவர்கள் இதற்கு விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களுக்கு ஒக்டோபர் 1ஆம் திகதி நியமனக் கடிதங்கள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
kidhours – Tamil News Job For Students , Tamil News Job For Students update
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.