Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the rank-math domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/kidhou5/public_html/wp-includes/functions.php on line 6114
நோபல் பரிசை ஏலமிட்டு உக்ரைன் குழந்தைகளுக்கு உதவும் ஊடகவியாளர் Tamil News for Kids # World Best Tamil - சிறுவர்களுக்கான அறிவுத்திறன் வளர்ச்சிக்குரிய வழிகாட்டல்கள்
Saturday, November 23, 2024
Homeசிறுவர் செய்திகள்நோபல் பரிசை ஏலமிட்டு உக்ரைன் குழந்தைகளுக்கு உதவும் ஊடகவியாளர் Tamil News for Kids #...

நோபல் பரிசை ஏலமிட்டு உக்ரைன் குழந்தைகளுக்கு உதவும் ஊடகவியாளர் Tamil News for Kids # World Best Tamil

- Advertisement -

Tamil News for Kids  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

ரஷ்யாவின் நொவாயா கசெட்டா என்ற செய்தித்தாளின் தலைமை ஆசிரியர் டிமிட்ரி முராடோவ். இவர் 2021ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பிலிப்பைன்சின் மரியா ரேசா என்ற ஊடகவியலாளருடன் கூட்டாக பெற்றார். பத்திரிகை சுதந்திரம், கருத்துரிமை போன்றவற்றுக்கு இவர்கள் ஆற்றிய பங்களிப்பு காரணமாக இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்நிலையில், ரஷ்யாவின் முராடோவ் தற்போது நடைபெறும் ரஷ்யா-உக்ரைன் போரில் பாதிப்புக்குள்ளாகும் உக்ரைன் நாட்டின் குழந்தைகளின் நலனுக்காக தனது நோபல் பரிசை ஏலமிட்டுள்ளார். அமெரிக்காவின் நியூ யார்க்கை சேர்ந்த நபர் ஒருவர் ரூ.808 கோடிக்கு நோபல் பரிசை ஏலமெடுத்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

- Advertisement -
Tamil News for Kids
Tamil News for Kids

இந்த ஏலத்தொகையை போரால் பாதிக்கப்பட்டு புலம் பெயரும் உக்ரைன் குழந்தைகளுக்கு செலவிட உள்ளார் முராடோவ். இந்த போர் தொடர்பாக முராடோவ் வீடியோ பதிவில் கூறியதாவது, போர் நடைபெறுகிறது என்பதை நாம் உலகின் பார்வைக்கு முன்வைக்க வேண்டும், இதில் அதிகம் பாதிக்கும் நபர்களுக்கு நாம் உதவ வேண்டும் என்பதே இதன் நோக்கம் என்றுள்ளார்.

- Advertisement -

ரஷ்ய அரசின் செயல்பாடுகளை விமர்சனப் பார்வையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் ரஷ்யாவின் ஒரே நாளேடு முராடோவின் நொவாயா கசெட்டா மட்டுமே. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு மேற்கொண்ட பின் செயல்படுவதில்லை. போர் தொடர்பாக விமர்சன செய்திகளை வெளியிட்டால் கடும் சிறை தண்டனை வழங்கப்படும் என ரஷ்யா சட்டம் பிறப்பித்த நிலையில் தனது செயல்பாட்டை நொவாயா கசெட்டா நிறுத்திக்கொண்டது.

இந்த பத்திரிகை 1993ஆம் ஆண்டில் சோவியத் ரஷ்யா உடைந்த பின்னர் தொடங்கப்பட்டது. 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் மட்டும் நொவாயா ஊடகத்தின் புலனாய்வு செய்தியாளர்கள் 6 பேர் தங்களின் செயல்பாடுகளுக்காக கொலை செய்யப்பட்டுள்ளனர். தனது நோபல் பரிசை உயிரிழந்த ஆறு பேருக்கு சமர்ப்பித்திருந்தார் முராடோவ்.

 

kidhours – Tamil News for Kids ,Tamil News for Kids website in world

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.