Diseases Threatening சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலகின் பல நாடுகளில் சுவாச அமைப்புடன் தொடர்புடைய தொற்று நோயான கக்குவான் இருமல் (Whooping cough) மீண்டும் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் வருடந்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் கக்குவான் இருமல் நோயால் பாதிக்கப்பட்டு இறப்புகள் பதிவாகி வருகின்றது.
இந்நிலையில் ,2024 ஆம் ஆண்டு இந்நோய்த்தாக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நோயின் தாக்கம் சீனா, பிலிப்பைன்ஸ், நெதர்லாந்து, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் சீனாவில் இருந்து 32,380 பேர் கக்குவான் இருமல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 13 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 20 வீத அதிகரிப்பு என சீன அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.மேலும் கடந்த ஆண்டை விட பிலிப்பைன்ஸில் கக்குவான் இருமல் நோயாளிகளின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kidhours – Diseases Threatening
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.