54 People Died சிறுவர்களுக்கான உலக செய்திகள்
நைஜீரியாவின் வட மத்திய பகுதியில் உள்ள நசராலாபெனு மாகாணங்களுக்கு இடையே குண்டு வெடித்துள்ளது.
இந்த குண்டு வெடிப்பில் சிக்கி கால் நடை மேய்ப்பவர்கள், பொதுமக்கள் என 54 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.மேலும், இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியது யார் என்பது தெரியவில்லை.
வடமத்திய நைஜீரியாவில் கால்நடை மேய்ப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இதுதொடர்பாக நசராலா மாகாண கவர்னர் அப்துல்லாஹி கூறும் போது,
“இந்த சம்பவத்தால் ஏற்படக்கூடிய பதட்டத்தை தணிப்பதை உறுதி செய்வதற்கு பாதுகாப்பு நிறுவனங்களை சந்தித்து வருகிறோம்” என்றார்.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.