Sunday, February 16, 2025
Homeபொழுது போக்குமூலிகைகளை சேகரிப்போம்வேப்பிலையின் மருத்துவ குணங்கள் Neem Medicine

வேப்பிலையின் மருத்துவ குணங்கள் Neem Medicine

- Advertisement -

Neem Medicine வேப்பிலையின் மருத்துவம்

- Advertisement -

நமது நாட்டில் பல வகையான மரங்கள் இருக்கின்றன. சில மரங்கள் அதன் மருத்துவ தன்மை காரணமாக இறைவனாக கருதி வழிபட படுகின்றன. அப்படியான இந்திய நாட்டிற்கேயுரிய ஒரு மரம் தான் வேப்ப மரம். பண்டைய நாட்களில் இந்தியாவிற்கு வருகை தந்த கிரேக்கர்களும் இந்த வேப்ப மரத்தின் மருத்துவ குணங்களை போற்றி தங்கள் நாட்டின் குறிப்புகளில் எழுதியுள்ளனர்.

அப்படியான வேப்ப மரத்தின் இலைகளுக்கு இருக்கும் சில நோய் நீக்கும் தன்மைகளை இங்கு தெரிந்து கொள்வோம்.
கொழுந்து வேப்பிலைகள் மற்றும் வேப்பம் பூக்களை பச்சடி செய்தும் ரசமாக வைத்தும் உட்கொள்ள செரிமான கோளாறுகள் நீங்கும். குடல்களில் பூச்சி புழுக்களை போக்கும்.

- Advertisement -
Neem Medicine வேப்பிலையின் மருத்துவம்
Neem Medicine வேப்பிலையின் மருத்துவம்

மற்றும் வயிற்றில் ஏற்பட்டுள்ள புண்களை ஆற்றும் கோடைகாலங்களில் அதிக உஷ்ணத்தாலும், சில கிருமிகளின் தொற்றாலும் சிலருக்கு தட்டம்மை, பெரியம்மை, சின்னம்மை போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இத்தகைய காலங்களில் வேப்பிலைகளை நன்கு அரைத்து, உடல் முழுவதும் பூசி, சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.

- Advertisement -

பின்பு குளிர்ந்த நீரில் மஞ்சள் மற்றும் வேப்பிலைகளை ஊற வைத்து, அந்த நீரை ஊற்றி குளிக்க அம்மை குணமாகும். இதை ஒரு வார காலத்திற்கு மேலாக செய்ய வேண்டும்.வேப்பிலை கொழுந்துகளை தினந்தோறும் சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் ரத்தத்தில் நோய் எதிர்ப்பு திறன் அதிகருக்கும்.

மேலும் பாம்பு மற்றும் இதர விஷ ஜந்துக்களிடம் கடிபடும் பட்சத்தில் வேப்பங்கொழுந்துகளை அதிகம் உண்ண விஷம் உடலில் வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும். இதற்கு பின்பு முறையான விஷ நீக்க சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
நமது தோலில் வேர்க்குரு, அரிப்பு, படை, தேமல் போன்ற பல வகையான நோய்கள் ஏற்படுகின்றன. வேப்பிலைகள் மற்றும் அதன் பூக்களை நன்றாக அரைத்து வாரத்திற்கு ஒரு முறை உடலெங்கும் பூசி, அது காய்ந்த பின்பு சற்று இதமான நீரில் குளித்து வர பல தோல் சம்பந்தமான வியாதிகள் நீங்கும்.

வேப்பிலைகளில் இருக்கும் காரத்தன்மை புற்று நோய் செல்களை அழிக்கும் திறன் கொண்டது. சிறிது வேப்பிலை கொழுந்துகளை நன்றாக அரைத்து, மாதுளம் பழச்சாற்றுடன் கலந்து அருந்தி வருபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகும்.

புற்று நோய் பாதிப்பிலிருந்து காக்கும். அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு வரும் விந்தக புற்று மற்றும் பெண்களுக்கு வரும் கருப்பை புற்றிலிருந்து காக்கும்.

வேப்பிலைகளை பச்சையாக மென்று தின்ன அதன் சாறுகள் ஈறுகளில் படும் போது ஈறு சம்பந்தமான பிரச்சனைகளை நீக்கும். பற்களில் சொத்தை ஏற்படாமல் இருக்கும். வாய் துர்நாற்றத்தையும் போக்கும்.

சுவாச கோளாறுகள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலைகளை சாப்பிட்டு வருபவர்களுக்கு நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும். வெளிப்புற கிருமி தொற்றால் ஏற்படும் நுரையீரல் மற்றும் சுவாச சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் காக்கும்.

 

Kidhours – Neem Medicine , Neem Medicine in Tamil

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.