Thursday, November 21, 2024
Homeபொழுது போக்குமூலிகைகளை சேகரிப்போம்வல்லாரையின் மருத்துவ குணம் தெரியுமா ? Vallarai Moolikai - Centella Asiatica

வல்லாரையின் மருத்துவ குணம் தெரியுமா ? Vallarai Moolikai – Centella Asiatica

- Advertisement -

Vallarai  Moolikai – Centella Asiatica வல்லாரை மூலிகைகளை சேகரிப்போம்,

- Advertisement -

வல்லாரை கீரை என்பது ஒரு பல்வேறு மருத்துவ மூலிகைப் பயன்பாட்டுடைய கீரை வகைத் தாவரமாகும். இது நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் தன்மை கொண்டது. இதன் இலைகளை உணவாகப் பயன்படுத்துவதால் இத்தாவரம், கீரை இனங்களில் ஒன்றாக விளங்குகிறது.

வல்லாரை தரையில் படர்ந்து பரவும் தன்மை கொண்டது. இதன் படரும் தண்டிலுள்ள கணுக்களிலிருந்து வேர்கள் முளைக்கின்றன.

- Advertisement -

இது இந்தியா முழுவதும் ஈரப்பசை நிறைந்த இடங்களில், குறிப்பாக ஆறுகள், ஓடைகள் போன்ற நீர்ப்பாசனம் மிகுந்த வயல் வெளிகளிலும் காணப்படுகின்றன. வல்லாரையின் இலைகள் வட்ட வடிவமாக தவளையின் பாதம் போன்ற அமைப்பை கொண்டது.

- Advertisement -

வல்லாரை கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச் சத்துகள் மற்றும் தாது உப்புக்கள் அதிகமாக உள்ளன. ரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரியான அளவில் இந்த கீரை கொண்டுள்ளது.

Vallarai  Moolikai - Centella Asiatica வல்லாரை மூலிகைகளை சேகரிப்போம்,
Vallarai  Moolikai – Centella Asiatica வல்லாரை மூலிகைகளை சேகரிப்போம்,

வல்லாரை கீரையானது இரத்தத்தை சுத்திகரிக்கிறது, ஞாபகசக்தியை அதிகரிக்கிறது. வல்லாரை கீரை உடலில் ஏற்பட்ட புண்களை ஆற்றும்.

வல்லாரை கீரை தொண்டைக்கட்டு, காய்ச்சல், சளி குறைய உதவுகிறது, உடற்சோர்வு, பல் சம்பந்தமான நோய்கள் மற்றும் சொறி, சிரங்கு, படை போன்ற தோல் நோய்களை குணமாக்கும்.

வல்லாரை கீரையை கொண்டு பல்துலக்கினால், பற்களில் படிந்துள்ள மஞ்சள் தன்மை நீங்கும். வல்லாரை கீரை நரம்பு தளர்ச்சியை குணமாக்கி, மூளைச் சோர்வை நீக்கி மூளையின் சிந்திக்கும் திறனை அதிகரிக்கும்.

அஜீரணக் கோளாறுகளை சரி செய்யும், மங்களான பார்வையை சரி செய்யும். பால்வினை நோய்கள், வெண்குஷ்டம் போன்ற நோய்களுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும்.

பிரசவத்திற்கு பின் தாயின் உடல்நிலை தேறுவதற்கு வல்லாரை இலைகளை இடித்து சாறெடுத்து, பனங்கற்கண்டோடு சேர்த்து கொடுக்கலாம்.

வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் புண், குடல் நோய், வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவை நீங்கும்.

வல்லாரை கீரை பொதுவாக இருதய பலத்துக்கும், தாது விருத்திக்கும் உதவுகின்றது. வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

வல்லாரை இலையை உலர்த்தி நன்குப் பொடித்து, பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் குடித்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிந்துபோகும்.

 

Kidhours – Vallarai Moolikai

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.