Sunday, January 19, 2025
Homeகல்விஇசை குறித்த அடிப்படையும் விளக்கங்களும் tamil music # best music kidhours

இசை குறித்த அடிப்படையும் விளக்கங்களும் tamil music # best music kidhours

- Advertisement -

இசை என்றால் என்ன?

Tamil music isai

- Advertisement -

காதுகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தாளம், மெல்லிசை மற்றும் நல்லிணக்கத்தின் வரிசைப்படுத்தப்பட்ட கலவையாக இசை அறியப்படுகிறது . அதன் முதிர்ச்சியற்ற தன்மை காரணமாக, இசை இலக்கியத்தைப் போலவே ஒரு தற்காலிக அல்லது நேரக் கலையாகக் கருதப்படுகிறது.

கட்டுப்பாட்டு அர்த்தத்தில், இசை என்பது ஒலி அல்லது இணக்கமான மற்றும் அழகியல் செல்லுபடியாகும் விளைவுகளை ஒருங்கிணைத்து கடத்தும் கலை, அவை குரல் அல்லது இசைக்கருவிகள் மூலம் உருவாக்கப்படுகின்றன.

- Advertisement -

கட்டுப்பாட்டு அர்த்தத்தில், இசை என்பது ஒலி அல்லது இணக்கமான மற்றும் அழகியல் செல்லுபடியாகும் விளைவுகளை ஒருங்கிணைத்து கடத்தும் கலை, அவை குரல் அல்லது இசைக்கருவிகள் மூலம் உருவாக்கப்படுகின்றன.

- Advertisement -

இசை என்பது மக்களின் கலை மற்றும் கலாச்சார வெளிப்பாடாகும், இதனால் அது அவர்களின் வடிவத்திற்கு ஏற்ப பல்வேறு வடிவங்கள், அழகியல் மதிப்புகள் மற்றும் செயல்பாடுகளைப் பெறுகிறது. அதே நேரத்தில், ஒரு நபர் தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு வழியாகும்.

இசையை நடைமுறைக்குக் கொண்டுவருபவர் அல்லது ஒரு கருவி மூலம் வாசிப்பவர் ஒரு இசைக்கலைஞர் என்று அழைக்கப்படுகிறார் .

எனவே, அதிகம் என்ற வார்த்தையை உருவகமாகப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, இது போன்ற பேச்சுவழக்கு சொற்றொடர்களில் இதைப் பயன்படுத்தலாம்

ஏழு சுரங்கள் இருப்பதும் அவற்றின் விபரங்களும் நாம் அறிவோம்.
ஸ – ஷட்ஜம்
ரி – ரிஷபம்
க – காந்தாரம்
ம – மத்யமம்
ப – பஞ்சமம்
த – தைவதம்
நி – நிஷாதம்
இந்த ஒவ்வொரு சுரமும் ஒரு ஒலியமைப்பே ஆகும். இவற்றிற்கு தனித்தனி அலைவரிசைகள் உண்டு. இதேபோல் பண்டைய காலத்தில் தமிழிசையிலும் இதற்கான சமமான ஒலி அலைவரிசைகளை பகுத்துள்ளனர்.

சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையில் இந்நரம்புகளின் மாத்திரைகள் வருமாறு

“குரறுத்த நான்கு கிளைமூன் றிரண்டாங்
குரையா வுழையிளி நான்கு-விரையா
விளரியெனின் மூன்றிரண்டு தாரமெனச் சொன்னார்
களரிசேர் கண்ணுற் றவர்”

தாரத்து உழை பிறக்கும்;
உழையிற் குரல் பிறக்கும்;
குரலுள் இளி பிறக்கும்;
இளியுள் துத்தம் பிறக்கும்;
துத்தத்துள் விளரி பிறக்கும்;
விளரியுட் கைக்கிளை பிறக்கும்

இவற்றுள் முதலிற்றோன்றிய நரம்பு தாரம்; இவை விரிப்பிற் பின்வருமாறு பெருகும் என்பதைக் காண்க.

குரலுக்கு 4 அலகும்,
துத்தத்துக்கு 4 அலகும்,
கைக்கிளைக்கு 3 அலகும்,
உழைக்கு 2 அலகும்,
இளிக்கு 4 அலகும்,
விளரிக்கு 3 அலகும்,
தாரத்திற்கு 2 அலகுமாக
மொத்தம் 22 அலகு என்று சொல்லுகின்றார்.

இந்த ஏழு சுரங்களில் ஸ, ப ஆகிய இரண்டும் ப்ருக்ருதி ஸ்வரங்கள் எனக் கூறப்படும்.

அதாவது இவை மாறுதல் இல்லாத சுரங்களாகும். ஸ மற்றும் ப சுரங்கள் முழுமையான சுரங்கள் என்பது தெளிவு.

இதன் அலைவரிசையில் சற்று கீழோ, அல்லது மேலோ மாறுதல் இருக்கும் போது அடுத்த சுரத்திற்குத் தாவிவிடும்.

சுரஸ்தானத்தில் ஒரே ஒரு ச, ப மட்டுமே இடம்பெற முடியும்.

சுரங்களில் இருக்கும் அலைவரிசை அல்லது அசைவு எண்கள் (Frequency Hz) கீழே வருமாறு

ச – 240
நி – 256
க – 300
ம – 320
ப – 360
த – 384
நி – 450
ச் – 480

ஆரோகனம்- சுரங்கள் மற்றொன்றைவிட அதிகரித்துச் செல்லும்போது ஆரோகனம் என்று பெயர். தமிழிசையில் இதற்கு ஏறுநிரல் எனப் பெயர்.
ச ரி க ம ப த நி ச

அவரோகனம் – சுரங்கள் ஒன்றுக்கொன்று குறையும்போது அவரோகனம் என்று பெயர். தமிழிசையில் இதற்கு இறங்கு நிரல் எனப் பெயர்.
ச நி த ப ம க ரி ச
இதுவே ஒரு சுரஸ்தானம் (Octave) ஆகும். இப்படி ஏற்ற இறக்கங்களோடு இருக்கும் சுரக் கோர்வையை ராகம் என்பர். பழந்தமிழ்ப்பண்களே இக்கால இந்திய இசையில் ‘இராகம்’ என்று சொல்லப்படுகிறது.

பண்களுக்கு உரிய இசை ஏழு என்றும், இவற்றை குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என அழைத்தனர்.

இவற்றை ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் உயிர் நெட்டெழுத்து ஒலிகளால் இசைத்தனர்.

தமிழ்மொழியில் வடமொழிக் கலப்பு ஏற்பட்டபோது இந்த ஏழு இசைகளைச் ‘சுரம்’ என்றனர்.

ஸட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்தியமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்று ஆயின என்பதனையும் அறிவோம்..

இவற்றைப் பாடும்பொழுது முதலெழுத்துக்கள் ஸ, ரி, க, ம, ப, த, நி என்று பாடினர்.

(இவற்றின் முதலெழுத்துகளே ஸ, ரி, க, ம, ப, த, நி என வடமொழி ஆயிற்று).

பண்களின் எண்ணிக்கை

பண்கள் நூற்றுமூன்று எனக் கொண்டனர் பழந்தமிழர். பண்களுக்கு உரிய இசை ஏழு என்றால், நூற்றுமூன்று பண்கள் எவ்வாறு ஆயின?

குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்று ஆரோசையிலும், தாரம், விளரி, இளி, உழை, கைக்கிளை, துத்தம், குரல் என அமரோசையிலும் ஏழு இசையும் அமைந்தால் அது “பண்” எனப்படும்.

கருநாடக இசையின் ஆரோகணம் அவரோகணம் என்பது தான் ஆரோசை அமரோசை ஆகும்.

tamil music isai kidhours
tamil music isai kidhours

இவ்வாறு ஆரோகண அவரோகணத்தில் ஏழு சுரங்களும் முறையே அமைந்தால் கருநாடக இசையில் இது “சம்பூர்ண இராகம்” எனப்படும்.

ஏழிசையில் ஆறு இசை கொண்டவை “பண்ணியல்” எனப்படும்.
(கருநாடக இசையில் இது “ஷாடவ இராகம்” எனப்படும்).

ஏழிசையில் ஐந்திசை கொண்டது “திறம்” எனப்படும்.
(கருநாடக இசையில் இது “ஒளடவ” இராகம் எனப்படும்).

ஏழிசைகளையும் பழந்தமிழர் இவ்வாறு வகுத்துக் கொண்டனர்.
பின் அவற்றைப் பின்வருமாறு பகுத்துக் கொண்டனர்.

பண் வகைகள் – (சம்பூர்ண இராகம்) – 17
பண்ணியல்கள் – (ஷாடவ இராகம்) – 70
திறங்கள் – (ஒளடவ இராகம்) – 12
திறத்திறங்கள் – (சுராந்தரம்) – 04
மொத்தம் – 103

பஞ்சமரபு நூலின் ஆசிரியர் அறிவனார் இந்த விளக்கத்தை ஒரு வெண்பாவில் தருகிறார்.

பண்ணோர் பதினேழாம் பண்ணியல் பத்தேழாம்
எண்ணுந் திறமிரண்டும் பத்தென்ப – நண்ணிய
நாலாந் திறத்திற மோர் நான்கு முளப்படப்
பாலாய பண் நூற்று மூன்று.

சங்க இலக்கியங்களில் பண்கள் பற்றிய குறிப்புகள் காணப் பெறுகின்றன. ஆம்பல் பண், காஞ்சிப் பண், குறிஞ்சிப் பண், நைவளம் போன்ற பண்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

1.ஆம்பல்பண்

ஆம்பல் என்பது ஒருவகைப் பண்ணாகும்.
இப்பண்ணைப் பற்றிய செய்திகள் நற்றிணை (123 : 10),
ஐங்குறுநூறு (215 : 3-5), குறிஞ்சிப்பாட்டு (221-222)
ஆகிய பாடல்களில் காணப் பெறுகின்றன.

கோவலர்கள் ஆம்பல் பண்ணை இசைக்கின்றனர். தட்டை, தண்ணுமை போன்ற இசைக்கருவிகளுடன் மாலைக் காலத்தில் இசைத்து மகிழ்கின்றனர்.

2.காஞ்சிப்பண்

காஞ்சிப் பண் துயருறும் மக்களின் துயரம் போக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. விழுப்புண் பட்டவர்கள், பேய் பிடித்தவர்களின் வருத்தம் தீர இப்பண்ணினைப் பாடிய குறிப்பு, புறநானூறு 296-யில் காணப்பெறுகிறது.

3.குறிஞ்சிப் பண்

மலையுறை தெய்வங்களை மகிழ்விக்க, கூத்தரும் விறலியரும் குறிஞ்சிப் பண்ணைப் பாடியதாக மலைபடுகடாம் குறிப்பிடுகிறது.

tamil music isai kidhours
tamil music isai kidhours

4. நைவளம்

நைவளம் எனும் பண்ணைப் பற்றி, குறிஞ்சிப்பாட்டு (146), சிறுபாணாற்றுப்படை (36-38), பரிபாடல் (18-20-21) வரிகளில் குறிப்புகள் உள.

இப்பண் பகற்பொழுதில் இசைக்க வேண்டிய பண் என்றும், பாணன் யாழிசையுடன் பாடினான் என்றும், இப்பாடல்கள் வாயிலாக அறிய முடிகிறது.

மேலும் குறிஞ்சி, செவ்வழி, பஞ்சுரம், படுமலை, பாலை, மருதம், விளரி என்ற பண்களைப் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன.

 

kidhours –

tamil music isai kidhours,tamil music news,tamil music isai kalvi,tamil kids isai kalvi,tamil music notes,tamil music sources

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.