prandai – Cissus quadrangularis
மூலிகைகளை சேகரிப்போம்
பிரண்டையின் மருத்துவ குணம்
பிரண்டை எலும்பு வளர்ச்சி, பசியின்மை, சுளுக்கு, செரிமானம், வயிறு உப்பிசம், முதுகு வலி, கழுத்து வலி, வாந்தி, பேதி, வாய்ப்புண், வயிற்றுப்புண், உடல் பருமன், பசியின்மை, மலச்சிக்கல் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக அமைகிறது.
பிரண்டை உடலைத் தேற்றும் பசியைத் தூண்டும் பிரண்டையை துவையல் செய்து சாதத்துடன் சேர்த்துப் சாப்பிட்டு வர இரத்த மூலம் குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும்.
உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும், ஞாபக சக்தி பெருகும், மூளை நரம்புகளும் பலப்படும். பிரண்டைத் துவையலை குழந்தைகளுக்குத் கொடுத்து வர எலும்புகள் உறுதியாகும். எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாகக் கூடவும் பிரண்டை உதவுகிறது.
பிரண்டையில் சாறு 6 தேக்கரண்டி மற்றும் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் சாப்பிட்டு வர பெண்களுக்கு மாதவிடாய் சீராகும்.
பிரண்டையை வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்; உடல் வனப்பும் பெறும். பிரண்டையை சிறு துண்டுகளாக நறுக்கி, நெய்விட்டு வதக்கி நன்கு அரைத்து, சிறு நெல்லிக்காய் அளவிற்கு காலை, மாலை சாப்பிட ரத்த மூலம் குணமாகும்.
பிரண்டை, கற்றாழை வேர், நீர், முள்ளி வேர், பூண்டு, சுக்கு, மிளகு, கடுக்காய் சம அளவு எடுத்து அரைத்து மோரில் கலந்து குடித்து வர உள்மூலம் குணமாகும். இரைப்பை அழற்சி, அஜீரணம், பசியின்மை போன்ற செரிமான பிரச்சினைகளுக்கு பிரண்டை துவையல் மிகவும் சிறந்த மருந்தாக விளங்குகிறது.
உள் மற்றும் வெளி மூலம் மற்றும் வயற்றில் உள்ள குடற்புழுக்களை நீக்குவதற்கும் பிரண்டை நல்ல மருந்தாக விளங்குகிறது. பிரண்டையுடன் இஞ்சி, பூண்டு சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் பித்த மயக்கம், உடல் எரிச்சல் விலகும்
வாதநோய், கபநோய் உள்ளவர்கள் வாரம் இருமுறை பிரண்டை பயன்படுத்தினால் வாத கப தோஷம் கட்டுப்படும். பித்தத்தை அதிகபடுத்தும் குணம் கொண்டது. எனவே பிதசம்பந்தமான பிரச்னை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
வயிற்றுப் பொருமல் நீங்கும். வாயுத்தொல்லை அகலும். சுவையின்மை போகும். நன்கு பசியெடுக்கும். மூல நோயால் அவதிப்படுபவர்களுக்கு ஆறுதல் அளிக்கும்.
இரத்த ஓட்டத்தை சீராக்கும். இதயத்தை பலப்படுத்தும். மூட்டுவலி, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக உதிரப்போக்கு பால்வினை நோய்களுக்கு ஏற்றது.
Kidhours – prandai – Cissus quadrangularis
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.